100 இட்டுகட்டப்பட்ட ஹதீஸ்கள் (தொடர்-7)
61- ((المؤمن كيِّس فطِن حذر)) . موضوع . “كشف الخفاء” للعجلوني (2/2684) . “الكشف الإلهي” للطرابلسي (1/859) . ” الضعيفة” (760) .
61(முஃமின் அறிவாளி, புத்திகூர்மையானவன், பாவங்களைத் தவிர்ந்து கொள்பவன்) என்ற இந்த ஹதீஸ் அஜலூனி அவர்களுக்கு ”கஷ்ஃபுல் ஃகஃபா’ என்ற நூலில் (2/2684) ம் பக்கத்திலும் தராபல்ஸி அவர்களுக் குரிய ”கஷ்ஃபுல் இலாஹி’ என்ற நூலில் (1/859) பக்கத்திலும் ”அழ்ழயீஃபா’ என்ற நூலில் (760)ம் பக்கத்திலும் இட்டுக்கட்டப்பட்டது என்று உள்ளது.
62- ((يا أيها الناس قد أظلكم شهر عظيم ، شهر فيه ليلة خير من ألف شهر جعل الله صيامه فريضة وقيام ليلة تطوعاً..الخ)). ضعيف . “العلل” لابن أبي حاتم (1/249) . “الضعيفة” (871) .
62(மக்களே! கண்ணியமிக்க ஒரு மாதம் உங்களிடம் வந்துவிட்டது, அந்த மாதத்தில் ஆயிரம் மாதங்களை விட சிறந்த ஒரு இரவு இருக்கிறது, அம் மாதத்தின் பகலில் நோன்பு நோற்பதை கடமையாகவும், இரவில் நின்று வணங்குவதை சுன்னத்தாகவும் அல்லாஹ் ஆக்கியுள்ளான்……) என்ற இந்த ஹதீஸ் இப்னு அபீஹாதிம் அவர்களுக்கு ”அல்இலல்’ என்ற நூலில் (1/249) ம் பக்கத்திலும் ”அழ்ழயீஃபா’ என்ற நூலில் (871)ம் பக்கத்திலும் பலவீனமானது என்று உள்ளது.
63- ((يا جبريل صف لي النار، وانعت لي جهنم: فقال جبريل: إن الله تبارك وتعالى أمر بجهنم فأوقد عليها ألف عام حتى ابيضت، ثم أمر بها فأوقد عليها ألف عام حتى احمرت، ثم أمر فأوقد عليها ألف عام حتى اسودت فهي سوداء مظلمة..الخ)) . موضوع . “الهيثمي” (10/387) . “الضعيفة” (910) .
63(ஜிப்ரீலே! நரகத்தைப் பற்றிக் கூறும் என நபி(ஸல்)அவர்கள் கேட்டார் கள், அப்போது ஜிப்ரீல் அவர்கள் கூறினார்கள் அல்லாஹ் நரகத்திற்கு ஆணையிட்டான் அது வெண்மையாக ஆகுமளவிற்கு ஆயிரம் ஆண்டுகள் மூட்டப்பட்டது, பின்னர் அல்லாஹ் நரகத்திற்கு ஆணையிட்டான் அது சிகப்பாக ஆகுமளவிற்கு ஆயிரம் ஆண்டுகள் நெருப்புமூடப்பட்டது, பின்னரும் அல்லாஹ் நரகத்திற்கு ஆணையிட்டான் அது கருப்பாக ஆகுமளவிற்கு ஆயிரம் ஆண்டுகள் நெருப்புமூடப்பட்டது இறுதியாக அது இருள் நிறைந்த கருப்பாக ஆகிவிட்டது) என்ற இந்த ஹதீஸ் ”ஹைதமி’ என்ற நூலில் (10/387) ம் பக்கத்திலும் ”அழ்ழயீஃபா’ என்ற நூலில் (910) ம் பக்கத் திலும் பலவீனமானது என்று உள்ளது.
64- ((لا تكثروا الكلام بغير ذكر الله، فإن كثرة الكلام بغير ذكر الله قسوة للقلب، وإن أبعد الناس من الله القلب القاسي)). ضعيف. “الضعيفة” (920) .
64 (அல்லாஹ்வின் நினைவில்லாத பேச்சை அதிகப்படுத்தாதீர்கள், இறை நினைவில்லாமல் அதிகமாகப் பேசுவது உள்ளத்தைக் கல்லாக்கிவிடும், மக்களில் அல்லாஹ் விட்டும் தூரமானவன் கடின உள்ளவனே!) என்ற இந்த ஹதீஸ் ”அழ்ழயீஃபா’ என்ற நூலில்(920) ம் பக்கத்தில் பலவீனமா னது என்று உள்ளது.
65- إذا انتهى أحدكم إلى الصف وقد تم فليجبذ إليه رجلاً يقيمه إلى جنبه) ضعيف . “التلخيص الحبير” لابن حجر (2/37) . “الضعيفة” (921) .
65(ஒரு வரிசை பூர்த்தியான பின் உங்களில் ஒருவர் வரிசையில் தனியாக நின்றால் தனக்கு பக்கத்தில் நிற்பதற்காக ஒருவரை இழுத்துக் கொள்ள வேண்டும்) என்ற இந்த ஹதீஸ் ”அத்தல்கீஸில் கபீர்’ என்ற நூலில் (2/37) ம் பக்கத்திலும் இப்னு ஹஜர் அவர்களுக்குரிய ”அழ்ழயீஃபா’ என்ற நூலில் (921) ம் பக்கத்திலும் பலவீனமானது என்று உள்ளது.
66- ((الأبدال في هذه الأمة ثلاثون. مثل إبراهيم خليل الرحمن عز وجل كلما مات رجل أبدل الله تبارك وتعالى مكانه رجلاً)) . موضوع . “الأسرار المرفوعة” لعلي القاري (470) . “تمييز الطيب من الخبيث” لابن الديبع (7) . “المنار المنيف” لابن القيم (308) .
66(கண்ணியமிக்க அல்லாஹ்வின் நேசரான இப்ராஹீம்(அலை)அவர்களைப் போன்ற முப்பது மேன் மக்கள் இருப்பார்கள், அவர்களில் ஒருவர் மரணமடைந்துவிட்டால் அந்த இடத்தில் அல்லாஹ் வேறு ஒருவரைப் பகரமாக்கி விடுவான்) என்ற இந்த ஹதீஸ் அலி அல்காரி அவர்களுக்குரிய ”அல்அஸ் ராருல் மர்பூஆ’ என்ற நூலில் (470) ம் பக்கத்திலும் இப்னுத் தபீஃ அவர்க ளுக்குரிய ”தம்யீஷீத் கய்யிம் மினல் கபீஃத்’ என்ற நூலில் (7) ம் பக்கத் திலும், இப்னுல் கய்யிம் அவர்களுக்குரிய ”அல்மனாருல் முனீஃப்’ என்ற நூலில் (308) ம் பக்கத்திலும் இட்டுக்கட்டப்பட்டது என்று உள்ளது.
67- ((ما فضلكم أبو بكر بكثرة صيام ولا صلاة ، ولكن بشيء وقر في صدره)). لا أصل له . “الأسرار المرفوعة” لعلي القاري (452) . “الأحاديث التي لا أصل لها في الإحياء” للسبكي (288) . “المنار المنيف” (246).
67(அதிகமான நோன்பு, தொழுகையைக் கொண்டு அபூபக்ர் (ரலி)அவர்கள் உங்களைவிட சிறந்தவால்ல, ஆயினும் அவரது உள்ளத்தில் பதிந்துவிட்ட உறுதியான கொள்கையால் அவர் சிறந்தவர்) என்ற இந்த ஹதீஸ் அலி அல்காரி அவர்களுக்குரிய ”அல்அஸ்ராருல் மர்பூஆ’ என்ற நூலில் (452) சுப்கி அவர்களுக்குரிய ”அல் அஹாதீதுல்லதி லா அஸ்ல ஃபில் அஹ்யா’ என்ற நூலில் (288) ம் பக்கத்திலும் ”அல்மனாருல் முனீஃப்’ என்ற நூலில் (246) ம் பக்கத்திலும் ஆதார அடிப்படை அற்றது என்று உள்ளது.
68- ((تحية البيت الطواف)) . لا أصل له . “الأسرار المرفوعة” (130) . “اللؤلؤ المرصوع” (143) . “الموضوعات الصغرى” للقاري (88) .
68(கஅபத்துல்லாஹ்வின் காணிக்கை தவாஃபாகும்) என்ற இந்த ஹதீஸ் ”அல்அஸ்ராருல் மர்பூஆ’ என்ற நூலில் (130) ம் பக்கத்திலும் சுப்கி அவர்க ளுக்குரிய ”அல்அஹாதீதுல்லதி லா அஸ்ல ஃபில் அஹ்யா’ என்ற நூலில் (288) ம் பக்கத்திலும் ”அல்மனாருல் முனீஃப்’ என்ற நூலில் (246) ம் பக் கத்திலும் ஆதார அடிப்படை அற்றது என்று உள்ளது.
69- ((إن العبد إذا قام في الصلاة فإنه بين عيني الرحمن فإذا التفت قال له الرب: يا ابن آدم إلى من تلتفت؟ إلى من هو خير لك مني؟ ابن آدم أقبل على صلاتك فأنا خير لك ممن تلتفت إليه)) . ضعيف جداً . “الأحاديث القدسية الضعيفة والموضوعة” للعيسوي (46) . “الضعيفة” (1024) .
69 (ஒரு அடியான் தொழுகைக்காக நின்றுவிட்டால் அவன் ரஹ்மானுடைய கண் பார்வையில் இருக்கிறான், அவன் திரும்பிப் பார்த்தால் அவனிடம் ஆதமுடைய மகனே! யாரின் பக்கம் நீ திரும்பிப் பார்க்கிறாய்? என்னை விட சிறந்தவரின் பக்கமா? என ரப்பு-இறைவன்- கேட்கிறான், ஆதமுடைய மகனே! தொழுகையில் என் பக்கம் முன்னோக்கு நீ யார் பக்கம் திரும்ப நினைக்கிறாயோ அவர்களின் நானே மிகச் சிறந்தவன்) என்ற இந்த ஹதீஸ் ஈஸவி அவர்களுக்குரிய ”அல்அஹாதீசுல் குதுஸிய்யதிழ் ழயீஃபதி வல் மவ்ழூஆத்’ என்ற நூலில் (46) ம் பக்கத்திலும் ”அழ்ழயீஃபா’ என்ற நூலில் (1024) ம் பக்கத்திலும் முற்றிலும் பலவீனமானது என்று உள்ளது.
70- ((وقع في نفس موسى: هل ينام الله تعالى ذكره؟ فأرسل الله إليه ملكاً. فأرقه ثلاثاً، ثم أعطاه قارورتين في كل يد قارورة … ثم نام نومة فاصطفقت يداه وانكسرت القارورتان قال: ضرب الله له مثلاً أن الله لو كان ينام لم تستمسك السماوات والأرض)). ضعيف . “العلل المتناهية” لابن الجوزي . “الضعيفة” (1034) .
70 (மூஸா(அலை)அவர்களின் உள்ளத்தில் அல்லாஹ் உறங்குவானா? என்ற எண்ணம் தோன்றியது, அப்போது அல்லாஹ் ஒரு மலக்கை அனுப்பி வைத்து அவரின் உள்ளத்தை மென்மைப்படுத்தினான் பின்னர் அவருடைய ஒவ்வொரு கையிலும் ஒரு பளிங்குப் பாத்திரமாக இரண்டு பாத்திரங்களைக் கொடுத்தான்… பின்னர் அவர் நன்கு உறங்கினார் உறங்கியதும் ஒரு கை மற்றொரு கையுடன் மோதி இரண்டும் உடைந்துவிட்டன, இந்த உதாரணத்தின் மூலம் அல்லாஹ் உறங்கிவிட்டால் வானங்கள், பூமி நிலையாக நிற்காது என்று விளக்கிக் கூறினான்) என்ற இந்த ஹதீஸ் இப்னுல் ஜவ்ஸி அவர்களுக்குரிய ”அல்இலலுல் முதனாஹியா’ என்ற நூலிலும் ”அழ்ழயீஃபா’ என்ற நூலிலும் (1034) ம் பக்கத்தில் முற்றிலும் பலவீனமானது என்று உள்ளது.
இன்ஷா அல்லாஹ் தொடரும்…

















Post a Comment