இட்டுகட்டப்பட்ட ஹதீஸ்கள் (தொடர்-8)

0 comments

100 இட்டுகட்டப்பட்ட ஹதீஸ்கள் (தொடர்-8)


71- ((النظرة سهم من سهام إبليس من تركها خوفاً من الله آتاه الله إيماناً يجد حلاوته في قلبه)) . ضعيف جداً. “الترغيب والترهيب” للمنذري (4/106) . “مجمع الزوائد” للهيثمي (8/ 63) . “تلخيص المستدرك” للذهبي (4/314) .

71 (தவறான பார்வை இப்லீஸின் அம்பாகும், அப்பார்வையை ஒருவர் அல்லாஹ்வின் பயத்தின் காரணமாக விட்டு விட்டால் அல்லாஹ் அவருக்கு ஈமான் வழங்குகிறான், அவன் உள்ளத்தில் அதன் சுவையை அறிகிறான்) என்ற இந்த ஹதீஸ் முன்திரி அவர்களுக்குரிய ”அத்தர்கீப் வத்தர்ஹீப்’ என்ற நூலின் (4/106) ம் பக்கத்திலும், ஹைஃதமி அவர்களுக்குரிய ”மஜ்மவுஸ் ஸவாயித்’ என்ற நூலின் (63/8)ம் பக்கத்திலும் தஹபி அவர்களுக்குரிய ”தல்கீசுல் முஸ்தத்ரக்’ என்ற நூலின் (4/314) ம் பக்கத்திலும் முற்றிலும் பலவீனமானது என்று உள்ளது.

72- ((يعاد الوضوء من الرعاف السائل)) . موضوع. “ذخيرة الحفاظ” لابن طاهر (5/6526) .”الضعيفة” (1071) .

72 (பொன்னி மூக்கு உடைந்து இரத்தம் வழிந்தோடினால் மீண்டும் ஒளுச் செய்ய வேண்டும்) என்ற இந்த ஹதீஸ் இப்னுத் தாஹிர் அவர்களுக்குரிய ”தகீரதுல் ஹுஃப்பாழ்’ என்ற நூலின் (5/6526) ம் பக்கத்திலும், ”அழ் ழயீஃபா’ என்ற நூலின் (1071) ம் பக்கத்திலும் இட்டுக்கட்டப்பட்டது என்று உள்ளது.

73- ((ليس الإيمان بالتمني ولا بالتحلي، ولكن ما وقر في القلب وصدقه الفعل… الخ)). موضوع. “ذخيرة الحفاظ” لابن طاهر (4/4656) . “الضعيفة” (1098) . “تيببض الصحيفة” لمحمد عمرو (33) .

73 (ஈமான் மேலெண்ணத்தாலோ, அலங்காரத்தாலோ அல்ல, மாறாக உள்ளத்தில் உறுதி கொண்டு செயல் மூலம் உண்மைப்படுத்துவதாலே ஆகும்) என்ற இந்த ஹதீஸ் இப்னுத் தாஹிர் அவர்களுக்குரிய ”தகீரதுல் ஹுஃப்பாழ்’ என்ற நூலின் (4/4656) ம் பக்கத்திலும், ”அழ் ழயீஃபா’ என்ற நூலின் (1098) ம் முஹம்மத் அம்ர் அவர்களுக்குரிய ”தப்யீழுஸ்ஸஹீஃபா’ என்ற நூலின் (33) ம் பக்கத்திலும் இட்டுக்கட்டப்பட்டது என்று உள்ளது.

74- ((تخرج الدابة، ومعها عصى موسى عليه السلام، وخاتم سليمان عليه السلام ..فيقول هذا: يا مؤمن ، ويقول هذا : يا كافر)). منكر. “الضعيفة” (1108) .

74 (ஒரு பிராணி புறப்படும் அதனுடன் மூஸா(அலை)அவர்களின் கைத்தடியும் சுலைமான்(அலை)அவர்களின் மோதிரமும் இருக்கும்) என்ற இந்த ஹதீஸ் ”அழ்ழயீஃபா” (1108) ம் பக்கத்தில் வெறுக்கத்தக்கது என்று உள்ளது.

75- ((انطلق النبي صلى الله عليه وسلم وأبو بكر إلى الغار، فدخلا فيه فجاءت العنكبوت فنسجت على باب الغار…الخ)) . ضعيف . “الضعيفة” (1129) . “التحديث بما قيل لا يصح فيه حديث” لبكر أبي زيد (214) .

75 (ஒரு பிராணி புறப்படும் அதனுடன் மூஸா(அலை)அவர்களின் கைத் தடியும் சுலைமான்(iஅல)அவர்களின் மோதிரமும் இருக்கும்) என்ற இந்த ஹதீஸ் வெளுக்கத்தக்கது என்று உள்ளது. இப்னுத் தாஹிர் அவர்களுக்குரிய ”தகீரதுல் ஹுஃப்பாழ்’ என்ற நூலின் (4/4656) ம் பக்கத்திலும், ”அழ் ழயீஃபா’ என்ற நூலின் (1098) ம் முஹம்மத் அம்ர் அவர்களுக்குரிய ”தப்யீழுஸ்ஸஹீஃபா’ என்ற நூலின் (33) ம் பக்கத்திலும் இட்டுக்கட்டப்பட்டது என்று உள்ளது.

76- ((وجد النبي صلى الله عليه وسلم ريحاً فقال: ليقم صاحب هذا الريح فليتوضأ. فاستحيا الرجل أن يقوم فقال رسول الله صلى الله عليه وسلم: ليقم صاحب هذا الريح فليتوضأ فإن الله لا يستحي من الحق، فقال العباس: يا رسول الله أفلا نقوم كلنا نتوضأ؟ فقال: قوموا كلكم فتوضؤوا)) . باطل . “الضعيفة” (1132) .

76 (நபி(ஸல்)அவர்கள் ஒருவருக்கு காற்றுப் பிரிந்துள்ளது என அறிந்தார் கள் அப்போது இக்காற்றுப் பிரிந்தவர் எழுந்து சென்று ஒளுச் செய்து கொள்ளட்டும் எனக் கூறினார்கள், அம்மனிதர் எழுந்து செல்ல வெட்கப்பட்டார் மீண்டும் (ஸல்)அவர்கள் காற்றுப் பிரிந்தவர் எழுந்து சென்று ஒளுச் செய்து கள்ளட்டும் எனக் கூறி அல்லாஹ் உண்மையானவற்றுக்கு வெட்கப்படுவதில்லை என்று கூறினார்கள், அப்போது அப்பாஸ் அவர்கள் அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் எல்லோரும் சென்று உளுச் செய்து வரட் டுமா? எனக் கேட்டார்கள், அதற்கு (ஸல்)அவர்கள் எல்லோரும் சென்று உளுச் செய்து கொள்ளுங்கள் என்று கூறினார்கள்) என்ற இந்த ஹதீஸ் ‘அழ்ழயீஃபா’ என்ற நூலின் (1132)ம் பக்கத்தில் பொய்யானது என்று உள்ளது

77- ((إذا فعلت أمتي خمس عشرة خصلة حل بها البلاء: إذا كان المغنم دولاً والأمانة مغنماً والزكاة مغرماً ……..الخ)) . ضعيف . “سنن الترمذي” (2/33) . “العلل المتناهية” (2/1421) . “الكشف الإلهي” (1/33) .

77 (எனது உம்மத்தவர் பதினைந்து காரியங்களைச் செய்தால் அவர்களுக்குச் சோதனை இறங்கிவிடும் (அவை)யுத்தத்தில் கிடைத்த பொருள் நாட்டின் மூலாதாரமாகவும், அமானிதம் யுத்தத்தில் கிடைத்த பொருளாகவும் ஸகாத் கடனாகவும் இருந்தால்……) என்ற இந்த ஹதீஸ் ‘சுனனுத் திர்மதி’ என்ற நூலின் (2/33) ம் பக்கத்திலும் ‘அல் இலலுல் முதனாஹியா’ என்ற நூலின் (2/1421) ம் பக்கத்திலும் ‘அல் கஷ்ஃபுல் இலாஹி’ என்ற நூலின் (1/33) ம் பக்கத்திலும் பலவீனமானது என்று உள்ளது.

78- ((حب الدنيا رأس كل خطيئة)) . موضوع .”أحاديث القصاص” لابن تيمية (7) . “الأسرار المرفوعة” (1/163) . “تذكرة الموضوعات” (173) .

78 (உலகத்தைத் தேடுவது பாவங்களுக்கெல்லாம் தலையாய பாவமாகும்) என்ற இந்த ஹதீஸ் இப்னுத் தைமிய்யா அவர்களுக்குரிய ‘அஹாதீதுல் கிஸாஸ்’ என்ற நூலின் (7) ம் பக்கத்திலும் ‘அல் அஸ்ராருல் மர்பூஆ’ என்ற நூலில் (1/163) ம் பக்கத்திலும் ‘தத்கிரதுல் மவ்ழூஆ’ என்ற நூலின் (173) ம் இட்டுக்கட்டப்பட்டது என்று உள்ளது.

79- ((طلب الحلال جهاد، وإن الله يحب المؤمن المحترف)) . ضعيف .”النخبة البهية” للسنباوي (57) . “الكشف الإلهي” (1/518) . “الضعيفة” (1301) .

79 (ஹலாலானதைத் தேடுவது ஜிஹாதாகும், தொழில் செய்யும் முஃமினை நிச்சயமாக அல்லாஹ் நேசிக்கிறான்) என்ற இந்த ஹதீஸ் அஸ்ஸன்பாவி அவர்களுக்குரிய ‘அன்நுக்பதுல் பஹிய்யா’ என்ற நூலின் (57) ம் பக்கத்திலும் ‘அல் கஷ்ஃபுல் இலாஹி’ என்ற நூலில் (1/518) ம் பக்கத்திலும் ‘அழ்ழ யீஃபா’ என்ற நூலிலும் (1301) ம் பக்கத்தி லும் பலவீனமானது என்று உள்ளது.

80- ((لكل شيء عروس وعروس القرآن الرحمن)) . منكر. “الضعيفة” (1350) .

80 (எல்லாப் பொருளுக்கும் மிகச் சிறப்பான ஒன்று உள்ளது, குர்ஆனில் மிகச் சிறந்தது அர்ரஹ்மானாகும்) என்ற இந்த ஹதீஸ் அழ்ழயீஃபா’ என்ற நூலில் (1350) ம் பக்கத்தில் வெறுக்கத்தக்கது என்று உள்ளது.
இன்ஷா அல்லாஹ் தொடரும்……


Post a Comment

Contact us