இட்டுகட்டப்பட்ட ஹதீஸ்கள்-3

0 comments

100 இட்டுகட்டப்பட்ட ஹதீஸ்கள்-3


21- ((سؤر المؤمن شفاء)) . لا أصل له . ‘الأسرار المرفوعة’ (217) . ‘كشف الخفاء’ (1/1500)
‘الضعيفة’ (78) .

21(முஃமினின் உமிழ்நீர் நிவாரணம்) ”அல்அஸராருல் மர்ஃபூஆ” என்ற நூலின் (217)ம் பக்கத்திலும் ”கஷ்ஃபுல் கஃபா” என்ற நூலின் (1/1500)ம் பக்கத்திலும், (1/1500) ”அழ்ழயீஃபா” என்ற நூலின் (1/1500)ம் பக்கத்திலும் இந்த ஹதீஸ் எந்த ஆதார அடிப்படையுமற்றது என்று உள்ளது.

22- ((إذا رأيتم الرايات السود خرجت من قبل خراسان، فأتوها ولو حبواً فإن فيها خليفة الله المهدي)). ضعيف . ‘المنار المنيف’ لابن القيم (340) . ‘الموضوعات’ لابن الجوزي (2/39) . ‘تذكرة الموضوعات’ (233)

23(குராசான் நாட்டிலிருந்து கருப்பு நிறக் கொடிகள் வெளியாக நீங்கள் கண்டால் தவிழ்ந்தேனும் அங்கே சென்றுவிடுங்கள், அங்குதான் அல்லாஹ்வின் கலீஃபா மஹ்தி(அலை) உள்ளார்) என்ற இந்த ஹதீஸ் இப்னுல் முனீர் அவர்களுக்குரிய ”அல்மனாருல் முனீஃப்’ என்ற நூலில் (340)ம் பக்கத்திலும், இப்னுல் ஜவ்சி அவர்க ளுக்குரிய ”அல்மவ்ழூஆத்’ என்ற நூலில் (2/39)ம் பக்கத்திலும், ”தத்கிரதுல் மவ் ழூஆத்’ என்ற நூலில் (233)ம் பக்கத்திலும் பலவீனமானது என்று உள்ளது.

23- ((التائب حبيبُ الله)). لا أصل له . ‘الأحاديث التي لا أصل لها في الإحياء’ للسبكي (356) . ‘الضعيفة’ (95) .

23 (தவ்காச் செய்கவன் இறை நேசன்) என்ற இந்த ஹதீஸ்
சுபுக்கி அவர்களுக்குரிய ”அல்அஹாதீதுல்லதீ லா அஸல லஹா ஃபில் அஹ்யாஇ’ என்ற நூலில் (356)ம் பக்கத்திலும், ”அல்ழயீஃபா’ என்ற நூலில் (95)ம் பக்கத்தி லும் எந்த ஆதார அடிப்படையற்றது என்றுள்ளது.

24- ((أما إني لا أنسى ، ولكن أُنَسَّ لأُشَرِّع)) . لا أصل له . ‘الأحاديث التي لا أصل لها في الإحياء’ (357) . ‘الضعيفة’ (101) .

24 (நிச்சயமாக நான் எதையும் மறக்கமாட்டேன், எனினும் ஒன்றை மார்க் கமாகக்காட்டுவதற்காக நான் மறக்கடிக்கடுகிறேன்) என்ற இந்த ஹதீஸ் சுபுக்கி அவர் களுக்குரிய ”அல்அஹாதீதுல்லதீ லா அஸல லஹா ஃபில் அஹ்யாஇ’ என்ற நூலில் (357)ம் பக்கத்திலும், ”அல்ழயீ.பா’ என்ற நூலில் (101)ம் பக்கத்திலும் எந்த ஆதார அடிப்படையற்றது என்றுள்ளது.

25- ((الناس نيام فإذا ماتوا انتبهوا)). لا أصل له . ‘الأسرار المرفوعة’ (555) . ‘الفوائد المجموعة’ (766) . ‘تذكرة الموضوعات’ (200).

25 (மக்கள் மவ்த்தானவர்களாக இருக்கிறார்கள் எப்போது மரணமடைகி றார்களோ அன்று விழித்து உணர்வு பெறுகிறார்கள்) என்ற இந்த ஹதீஸ் ”அல்அஸ்ராருல் மர்ஃபூஆ’ என்ற நூலில் (555)ம் பக்கத்திலும், ”அல்ஃபவா யிதுல் மஜ்மூஆ’ என்ற நூலில் (766)ம் பக்கத்திலும் ”தத்கிரத்துல் மவ்மூ ஆத்’ என்ற நூலில் (200)ம் பக்கத்திலும் எந்த ஆதார அடிப்படையற்றது என்றுள்ளது.

26- ((من حدث حديثاً، فعطس عنده ، فهو حق)). موضوع . ‘تنزيه الشريعة’ (483) . ‘اللآلئ المصنوعة’ (2/286) . ‘الفوائد المجموعة’ (669)

26 (ஒருவர் பேசிக் கொண்டிருக்கும் போது தும்மிவிட்டால் அது சத்தியமா னது) என்ற இந்த ஹதீஸ் ”தன்ஸீஹுஸ் ஸரீஆ’ என்ற நூலில் (483)ம் பக்கத்திலும், ”அல்லஆலில் மஸ்னூஆ’ என்ற நூலில் (2/286)ம் பக்கத் திலும் ”அல்ஃபவாயிதுல் மஜ்மூஆ’ என்ற நூலில் (669)ம் பக்கத்திலும் இட்டுக்கட்டப்பட்டது என்றுள்ளது.

27- ((تزوجوا ولا تطلقوا، فإن الطلاق يهتز له العرش)). موضوع . ‘ترتيب الموضوعات’
(694) . ‘الموضوعات’ للصغاني (97) . ‘تنزيه الشريعة’ (2/202) .

27 (திருமணம் செய்யுங்கள், தலாக் கூறாதீர்கள் தலாக் கூறுவதால் அர்ஷ் நடுங்குகிறது) என்ற இந்த ஹதீஸ் ”தர்தீபுல் மவ்ழூ10ஆத்’ என்ற நூலில் (694)ம் பக்கத்திலும், அஸ்ஸகானி அவர்களுக்குரிய ”தன்ஸீஹுஸ் ஸரீஆ’ என்ற நூலில் (694)ம் பக்கத்திலும் ”அல்ஃபவாயிதுல் மஜ்மூஆ’ என்ற நூலில் (2/202) ம் பக்கத்திலும் இட்டுக்கட்டப்பட்டது என்றுள்ளது.

28- ((تعاد الصلاة من قدر الدرهم من الدم)). موضوع . ‘ضعاف الدار قطني’ للغساني (353) . ‘الأسرار المرفوعة’ (138) . ‘الموضوعات’ لابن الجوزي (2/76) .

28 (இரத்தத்தின் ஒரு திர்ஹம் அளவிற்கு தொழுகை மீட்டப்படும்;) என்ற இந்த ஹதீஸ் கஸ்ஸானி அவர்களுக்குரிய ”ழிஆஃபுத் தாரகுத்னீ’ என்ற நூலில் (353)ம் பக்கத்திலும், ”அல்அஸ்ராருல் மர்ஃபூஆத்’ என்ற நூலில் (138) ம் இப்னுல் ஜவ்ஸிக்குரிய ”அல்மவ்ழூஆத்’ என்ற நூலில் (2/76) ம் பக்கத்திலும் இட்டுக்கட்டப்பட்டது என்றுள்ளது.

29- ((السخي قريب من الله، قريب من الجنة. قريب من الناس، بعيد من النار، والبخيل بعيد من الله، بعيد من الجنة، بعيد من الناس ، قريب من النار وجاهل سخي أحب إلى الله من عابد بخيل)). ضعيف جدّاً . ‘المنار المنيف’(284) . ‘ترتيب الموضوعات’ (564) . ‘اللآلئ المصنوعة’ (2/91)

29 (கொடைவள்ளல் அல்லாஹ்வுக்கு நெருக்கமானவன், சுவர்க்கத்திற்கு நெருக்கமானவன், மக்களிடமும் நெருக்கமானவன். கஞ்சன் அல்லாஹ் வை விட்டும் தூரமானவன், சுவர்க்கத்தை விட்டும் தூரமானவன், மக்கi ளிட்டும் தூரமானவன். அறிவிலியான கொடை வள்ளல் கஞ்சனான அறி வாழியை விட அல்லாஹ்விடம் பிரியமானவன்) என்ற இந்த ஹதீஸ் ”அல்மனாருல் முனீஃப்’ என்ற நூலில் (284)ம் பக்கத்திலும், ”தர்தீபுல் மவ்ழுஆத்’ என்ற நூலில் (564)ம் பக்கத்திலும் ”அல்லஆலில் மஸ்னுஸஆ’ என்ற நூலில் (2/91) ம் பக்கத்திலும் பலவினமானது என்றுள்ளது.

30- ((أنا عربي والقرآن عربي ولسان أهل الجنة عربي)) . ‘تذكرة الموضوعات’ (112) . ‘المقاصد الحسنة’ (31) . ‘تنزيه الشريعة’ (2/30)

30 (நான் அரபி, குர்ஆன் அரபி, சுவர்க்கவாசிகளின் மொழி அரபி) என்ற இந்த ஹதீஸ் ”தத்கிரதுல் மவ்ழூஆத்’ என்ற நூலில் (112)ம் பக்கத்தி லும், ”அல்மகாசிதுல் ஹஸனா’ என்ற நூலில் (31)ம் பக்கத்திலும் ”தன்ஸீஹுஷ் ஷரீஆ’ என்ற நூலில் (2/30) ம் பக்கத்திலும் இட்டுக்கட் டப்பட்டது என்றுள்ளது.
இன்ஷா அல்லாஹ் தொடரும்….


Post a Comment

Contact us