இட்டுகட்டப்பட்ட ஹதீஸ்கள் (தொடர்-4)

0 comments

100 இட்டுகட்டப்பட்ட ஹதீஸ்கள் (தொடர்-4)


31- ((إن لكل شيء قلباً، وإن قلب القرآن (يس) من قرأها، فكأنما قرأ القرآن عشر مرات)). موضوع . “العلل” لابن أبي حاتم (2/55) . “الضعيفة” (169) .

31 (ஒவ்வொரு பொருளுக்கும் இருதயம் இருக்கிறது. குர்ஆனுக்கு இரு தயம் யாஸீன் ஆகும், யார் சூரத்து யாஸீனை ஒருமுறை ஓதுகிறாரோ அவர் குர்ஆனை பத்து முறை ஓதியவர் போலாவார்) என்ற இந்த ஹதீஸ் இட்டுக்கட்டப்பட்டது என்று இப்னு அபூஹாதம் அவர்களுக்குரிய ‘அல்இலல்’ என்ற நூலில் (2/55)ம் பக்கத்திலும், ‘அழ்ழயீஃபா’ என்ற நூலில் (169) ம் பக்கத்திலும் உள்ளது.

32- ((فكرة ساعة خير من عبادة ستين سنة)) . موضوع . ‘تنزيه الشريعة’ (2/305) . ‘الفوائد المجموعة’ (723) . ‘ترتيب الموضوعات’ (964) .

32 (ஒரு மணி நேரம் சிந்திப்பது அறுபது வருட வணக்கத்தை விட சிறந் தது) என்ற இந்த ஹதீஸ் இட்டுக்கட்டப்பட்டது என்று ‘தன்ஸீஹுஷ் ஷரீஆ’ என்ற நூலில் (2/305) ம் பக்கத்திலும் ‘அல்ஃபவாயிதுல் மஜ்மூஆ’ என்ற நூலில் (723) ம் ‘தர்த்தீபுல் மவ்ழூஆத்’ என்ற நூலில் (964) ம் பக்கத்திலும் உள்ளது.

33- ((لا صلاة لجار المسجد إلا في المسجد)) . ضعيف . ‘ضعاف الدارقطني’ (362) . ‘اللآلئ المصنوعة’ (2ஃ16) . ‘العلل المتناهية’ (1ஃ693).

33 (பள்ளிக்குப் பக்கத்திலிருப்பவனுக்கு பள்ளியைத் தவிர வேறு இடத்தில் தொழுவது கூடாது) என்ற இந்த ஹதீஸ் பலவீனமானது என்று ‘ழிஆஃபுத் தாரகுத்னி’ என்ற நூலில் (362)ம் பக்கத்திலும் ‘அல்லஆலில் மஸ்னூஆ’ என்ற நூலில் (2/16)ம் பக்கத்திலும் ‘அல் இலலுல் முதனாஹியா’ என்ற நூலில் (1/693) ம் பக்கத்திலும் உள்ளது.

34- ((الحجر الأسود يمين الله في الأرض يصافح بها عباده)). موضوع . ‘تاريخ بغداد’ للخطيب (6ஃ328) . ‘العلل المتناهية’ (2ஃ944) . ‘الضعيفة’ (223) .

34 (ஹஜருல் அஸ்வத் பூமியில் அல்லாஹ்வுடைய வலக்கரமாகும் அவனு டைய அடியார்கள் அந்தக் கையைத் தடவுகிறார்கள்) என்ற இந்த ஹதீஸ் இட்டுக்கட்டப்பட்டது என்று கதீபுக்குரிய ‘தாரிகு பக்தாதி’ என்ற நூலில் (6/328)ம் பக்கத்திலும் ‘அல் இலலுல் முதனாஹியா’ என்ற நூலில் (2/944) ம் பக்கத்திலும் ‘அழ்ழயீஃபா’ என்ற நூலில் (223)ம் பக்கத்திலும் உள்ளது.

35- ((صوموا تصحوا)) . ضعيف . ‘تخريج الإحياء’ (3ஃ87) . ‘تذكرة الموضوعات’ (70) . ‘الموضوعات’ للصغاني (72) .

35 (நோன்பு பிடியுங்கள் ஆரோக்கியம் பெறுவீர்கள்) என்ற இந்த ஹதீஸ் பல வீனமானது என்று ‘தக்ரீஜுல் அஹ்யா’ என்ற நூலில் (3/87)ம் பக்கத்தி லும் ‘தத்கிரதுல் மவ்ழூஆத்’ என்ற நூலில் (70) ம் பக்கத்திலும் ஸகானி அவர் களுக்குரிய ‘அல்மவ்ழூஆத்’ என்ற நூலில் (72)ம் பக்கத்திலும் உள்ளது.

36- ((أوصاني جبرائيل عليه السلام بالجار إلى أربعين داراً. عشرة من ها هنا، وعشرة من ها هنا ، وعشرة من ها هنا ، وعشرة من ها هنا)) . ضعيف . ‘كشف الخفاء’ (1ஃ1054) . ‘تخريج الإحياء’ (2/232) . ‘المقاصد الحسنة’ للسخاوي (170) .

36 (ஜிப்ரீல் (அலை) இந்தப் பக்கம், அந்தப் பக்கம் என்று நாற்பது அண்டை வீட்டாரை கவனித்துக் கொள்ளும்படி உபதேசித்தார்கள்) என்ற இந்த ஹதீஸ் பலவீனமானது என்று ‘கஷ்புல் ஃகஃபா’ என்ற நூலில் (1/1054) ம் பக்கத்திலும் ‘தக்ரீஜுல் அஹ்யா’ என்ற நூலில் (2/232) ம் பக் கத்திலும் ஸகாவி அவர்களுக்குரிய ‘அல்மகாஸிதுல் ஹஸனா’ என்ற நூலில் (170) ம் பக்கத்திலும் உள்ளது.

37- ((لولاك ما خلقت الدنيا)) . موضوع . ‘اللؤلؤ المرصوع’ للمشيشي (454) . ‘ترتيب الموضوعات’ (454). ‘الضعيفة’ (282).

37 ( (நபியே) நீர் இல்லையென்றால் இந்த உலகத்தை நான் படைத்திருக்கமாட்டேன்) என்ற இந்த ஹதீஸ் இட்டுக்கட்டப்பட்டது என்று மஷீஷி அவர்களுக்குரிய ‘அல்லுஃல் மர்ஸுஃ’ என்ற நூலில் (1/1054) ம் பக்கத் திலும் ‘தக்ரீஜுல் அஹ்யா’ என்ற நூலில் (454) ம் பக்கத்திலும் ‘தர்தீபுல் மவ்ழூஆத்’ என்ற நூலில் (454) ம் பக்கத்திலும் ‘அழ்ழயீஃபா’ என்ற நூலில்
(282) ம் பக்கத்திலும் உள்ளது.

38- ((من قرأ سورة الواقعة في كل ليلة لم تصبه فاقة أبداً)). ضعيف. ‘العلل المتناهية’ (1/151) . ‘تنزيه الشريعة’ (1/301) . ‘الفوائد المجموعة’ (972) .

38 ( ஒவ்வொரு இரவிலும் சூரத்துல் வாகியாவை ஒருவர் ஓதி வந்தால் அவருக்கு ஒருபோதும் வறுமை ஏற்படாது) என்ற இந்த ஹதீஸ் பலவீனமா னது என்று ‘அல் இலலுல் முதனாஹியா’ என்ற நூலில் (1/151) ம் பக்கத் திலும் ‘தன்ஸீஹுஷ் ஷரீஆ’ என்ற நூலில் (1/301) பக்கத்திலும் ‘அல் ஃபவாயிதுல் மஜ்மூஆ’ என்ற நூலில் (454) ம் பக்கத்திலும் ‘தர்தீபுல் மவ் ழூஆத்’ என்ற நூலில் (454) ம் பக்கத்திலும் ‘அழ்ழயீஃபா’ என்ற நூலில் (972) ம் பக்கத்திலும் உள்ளது.

39- ((من أصبح وهمه غير الله عز وجل ، فليس من الله في شيء ومن لم يهتم للمسلمين فليس منهم)) . موضوع . ‘الفوائد المجموعة’ (233) . ‘تذكرة الموضوعات’ (69) . ‘الضعيفة’ (309-312) .

39 (அல்லாஹ் அல்லாத ஒருவரை கவனத்தில் கொண்டவனாக ஒருவர் காலைப் பொழுதை அடைந்தால் அவர் அல்லாஹ்விடம் ஒரு பொருளாகக் கணிக்கப்பபடமாட்டார், யார் முஸ்லிம்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க மாட்டாரோ அவர் முஸ்லிம் அல்ல) என்ற இந்த ஹதீஸ் இட்டுக்கட்டப்பட்டது என்று ‘அல்ஃபவாயிதுல் மஜ்மூஆ’ என்ற நூலில் (233) ம் பக்கத்திலும் ‘தத்கிரதுல் மவ்ழூஆத்’ என்ற நூலில் (69) பக்கத்திலும் ‘அழ்ழயீஃபா’ என்ற நூலில் (309-312)ம் பக்கத்திலும் உள்ளது.

40- ((كما تكونوا يولي عليكم)) . ضعيف . ‘كشف الخفاء’ (2ஃ1997) . ‘الفوائد المجموعة’ (624) . ‘تذكرة الموضوعات’ (182).

40 (நீங்கள் இருப்பதுபோலவே(அதாவது நீங்கள் நடந்துகொள்ளும் நடை முறைபோலவே) உங்கள் மீது பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள்) என்ற இந்த ஹதீஸ் ‘அல்மஜ்மூதுல் ஃபவாயித்’ என்ற நூலில் (624)ம் பக் கத்திலும், ‘தத்கிரதுல் மவ்ழூஆத்’ என்ற நூலில் (182) ம் பக்கத்திலும், ‘கஷ்ஃபுல் கஃபா’ என்ற நூலில் (2/1997) ம் பக்கத்திலும் பலவீனமானது என்று உள்ளது.
இன்ஷா அல்லாஹ் தொடரும்….


Post a Comment

Contact us