100 இட்டுகட்டப்பட்ட ஹதீஸ்கள்
மக்கள் மத்தில் பரவலாக நடைமுறையில் உள்ள பிரபல்யமான இட்டுகட்டுப்பட்ட பலவீனமான 100 ஹதீஸ்களை நாம் இனம்கண்டு நமது தளத்தில் வெளியிடுகின்றோம். அதனை நமது வாசகர்களுக்கு வழங்குவதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றோம். இன்ஷா அல்லாஹ் 100 இட்டுகட்டப்பட்ட ஹதீஸ்கள் 2 நாட்களுக்கு ஒரு முறை இந்த தொடர் வெளியிடப்படும் என்பதனை தெரிவித்துக்கொள்கின்றோம்.
இந்த தொடருக்குள் செல்வதற்க்கு முன்…
ஹுதைபத்-இப்னு-யமான் (ரழி) என்ற நபிதோழர் அறிவிக்கின்றார், …எல்லோரும் நன்மையைப்பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்டுவந்தனர் ஆனால் நான் தீமைகளைப்பற்றி அதிகமாக நபி (ஸல்) அவர்களிடம் கேட்க கூடியவனாக இருந்தேன்…
ஹுதைபத்-இப்னு-யமான் (ரழி) என்ற நபிதோழர் அறிவிக்கின்றார், …எல்லோரும் நன்மையைப்பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்டுவந்தனர் ஆனால் நான் தீமைகளைப்பற்றி அதிகமாக நபி (ஸல்) அவர்களிடம் கேட்க கூடியவனாக இருந்தேன்…
مائة حديث من الأحاديث الضعيفة والموضوعة
وهي منتشرة بين الخطباء والوعاظ
مائة حديث من الأحاديث الضعيفة والموضوعة
وهي منتشرة بين الخطباء والوعاظ
பிரசங்கிகளுக்கும் உபதேசிகளுக்கும் இடையே பரவிக்கிடக்கும் இட்டுக்கட்டப்பட்ட, பலவீனமான 100ஹதீஸ்கள்
((من لم تنهه صلاته عن الفحشاء والمنكر، لم يزدد من الله إلا بعداً)). وفي لفظ: ((من لم تنهه صلاته عن الفحشاء والمنكر ، فلا صلاة له)). قال الذهبي : قال ابن الجنيد: كذب وزور. قال الحافظ العراقي: حديث إسناده لين، قال الألباني : باطل لا يصح من قبل إسناده ولا من جهة متنه. ‘ميزان الاعتدال’ (3ஃ293) . ‘نخريج الإحياء’ (1ஃ143) . ‘السلسلة الضعيفة’ (2 ، 985).
1 (எவருடைய தொழுகை அவரை ஆபாசங்கள், அறுவறுக்கத்தக்கவைகளை விட்டும் தடுக்கவில்லையோ அவர் அல்லாஹ்வை விட்டும் தூரமாகுவதைத் தவிர வேறு எதையும் அதிகமாக்கிக் கொள்ளவில்லை என்றும் மற்றொரு வார்த்தையில் எவருடைய தொழுகை அவரை ஆபாசங்கள், அறுவறுக்கத்தக்கவைகளை விட்டும் தடுக்கவில்லையோ அவர் தொழுகவே இல்லை) என்றும் ஒரு ஹதீஸ் உள்ளது இந்த ஹதீஸ் பொய்யானது என்று இப்னுல் ஜுனைத் கூறியதாக இமாம் தஹபி அவர்களும், இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடர் பலவீனமானது என்று ஹாபிழ் இராக்கி அவர்களும், ஹதீஸ் தொடரிலும் அதன் வார்த்தையிலும் ஆதாரமாகக் கொள்ள முடியாத ஆரோக்கிய மற்றது என்று அல்பானி அவர்களும் கூறி யுள்ளார்கள். ஆதார நூல்கள்: ‘மீஸானுல் இஃதிதால்’ (3/293), ‘தக்ரீஜுல் அஹ்யா’ (1/143), ‘அஸ் ஸிலத்துல் லயீஃபா’. (2/985).
2- ((الحديث في المسجد يأكل الحسنات كما تأكل البهائم الحشيش)). وفي لفظ : ((الحديث في المسجد يأكل الحسنات كما تأكل النار الحطب)). قال الحافظ العراقي: لم أقف له على أصل، قال عبد الوهاب ابن تقي الدين السبكي : لم أجد له إسناداً ، قال الألباني : لا أصل له. ‘تخريج الإحياء’ (1ஃ136) . ‘طبقات الشافعية’ للسبكي (4ஃ145) . ‘الضعيفة’ (4) .
2. (மிருகங்கள் புல் பூண்டுகளைத் தின்பது போல பள்ளியில் பேசுவது நன் மைகளைத் தின்றுவிடும், வேறு ஒரு வார்த்தையில் நெருப்பு விறகைத் தின்றுவிடுவது போல பள்ளியில் பேசுவது நன்மைகளைத் தின்றுவிடும்) என்ற இந்த ஹதீசுக்கு எந்த ஒரு அடிப்படையையும் நான் காணவில்லை என்று ஹாபிழ் இராக்கி அவர்களும், இதற்கு அறிவிப்பாளர் தொடரை நான் காணவில்லை என்று அப்துல் வஹ்ஹாப் பின் தகிய்யுத்தீன் அல்சுபுகி அவர் களும் இந்த ஹதீசுக்கு எந்த ஒரு அஸலையும் நான் காணவில்லை என்று அல்பானி அவர்களும் கூறியுள்ளனர். ‘தக்ரீஜுல் அஹ்யா’ (1/136) .,சுபுகி அவர்களுக்குரிய ‘தபக்காத்துஷ் ஷாஃபி’ (4/145) ‘அல்லயீஃபா’ (4)
(3) ((اعمل لدنياك كأنك تعيش أبداً ، واعمل لآخرتك كأنك تموت غداً)). قال الألباني: لا يصح مرفوعاً أي: ليس صحيح عن النبي صلى الله عليه وسلم. ‘الضعيفة’ (8) .
3 (உனது துன்யாவுக்–உலகத்திற்–காக பணி செய் அப்படிச் செய்தால் என்றென்றும் நீ வாழ்பவனைப் போல ஆகிவிடுவாய், உனது மறு உலக வாழ்க்கைக்காக பணி செய் அப்படிச் செய்தால் மறுநாளே மரணித்தவனைப் போன்று நீ ஆகிவிடுவாய்) என்ற இந்த ஹதீஸ் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என அல்பானி அவர்கள் கூறியுள்ளார்கள். ”அழ்ழயீஃபா” (8)
4- ((أنا جدُّ كل تقي)) قال السيوطي: لا أعرفه. قال الألباني : لا أصل له. ‘الحاوي’ للسيوطي (2/89/2) ‘الضعيفة’ (9) .
4 (இறையச்சமுடைய ஒவ்வொருவருக்கும் நான் பாட்டனாவேன்.) என்று ஒரு ஹதீஸ் இருப்பதாக நான் அறியவில்லை என்று சுயூத்தி இமாம் அவர்களும் இதற்கு எந்த ஒரு அடிப்படையும் இல்லை என்று அல்பானி அவர்களும் கூறியுள்ளார்கள். சுயூத்தி அவாளுக்குரிய ”ஹாவி” (89 / 2), அழ்ழயீஃபா(8)
5- ((إنما بعثتُ مُعَلِّماً)) قال العراقي: سنده ضعيف، قال الألباني : ضعيف. ‘تخريج الإحياء’ (1ஃ11) . ‘الضعيفة’ (11) .
5 (நிச்சயமாக நான் ஒரு ஆசிரியராக அனுப்பப்பட்டுள்ளேன்) இந்த ஹதீஸ் அறிவிப்பாளர் தொடர் பலவீனமானது என்று இராக்கி அவர்களும், இது பலவீனமானது என்று அல்பானி அவர்களும் கூறியுள்ளனர். தக்ரீஜுல் அஹ்யா (11 /1), அழ்ழயீஃபா(11)
6 – ((أوحى الله إلى الدنيا أن اخدمي من خدمني وأتعبي من خدمك)) قال الألباني : موضوع. ‘تنزيه الشريعة’ للكناني (2ஃ303) . ‘الفوائد المجموعة’ للشوكاني (712) . ‘الضعيفة’ (12) .
6 (அல்லாஹ், பூமியை நோக்கி எனக்கு பணி செய்பவனுக்கு நீ பணி விடை செய், உனக்கு பணி செய்பவனுக்கு கஷ்டத்தைக் கொடு என்று அறிவித்தான்) இந்த ஹதீஸ் இட்டுக்கட்டப்பட்டது என்று அல்பானி அவர்கள் கன்னான் அவர்களுக்குரிய தன்ஸுஹுஷ் ஷரீஆ என்ற (303 /2) நூலிலும், இமாம் ஷவ்க்கானிக்குரிய அல்ஃபவாயிதுல் மஜ்மூஆ என்ற (712) நூலிலும், அழ்ழயீபா (12),
7- ((إياكم وخضراءُ الدِّمن فقيل: ما خضراء الدِّمن؟ قال المرأةُ الحسناء في المنبت السوء)). قال العراقي: ضعيف وضعفه ابن الملقن . قال الألباني: ضعيف جداً. ‘تخريج الإحياء’ (2ஃ42) . ‘الضعيفة’ (14) .
7 (உங்களை நான் எச்சரிக்கை செய்கிறேன், கழ்ராவுத் தமினை விட்டும் தூரமாகிவிடுங்கள் என்று கூறினார்கள், அப்போது கழ்ராவுத் தமின் என்றால் என்ன? கேட்க்கப்பட்டது அதற்கு (ஸல்) அவர்கள் கெட்ட இடத்திலுள்ள அழகான பெண் என்று கூறினார்கள்) இந்த ஹதீஸ் பலவீனமானது என்று இராகி அவர்களும், மேலும் இப்னு முலக்கின் அவர்கள் இதை பலவீனமானது என்றும் அல்பானி அவர்கள் மிகப் பலவீனமானது என்றும் கூறியுள்ளார்கள் தக்ரீஜுல் அஹ்யா (42 /2) அழ்ழயீஃபா (14)
8- ((صنفان من أمتي إذا صلحا، صلح الناس: الأمراء والفقهاء)). وفي لفظ ((صنفان من أمتي إذا صلحا، صلح الناس: الأمراء والعلماء)). قال الإمام أحمد : في أحد رواته كذاب يضع الحديث ، قال ابن معين والدارقطني مثله، قال الألباني: موضوع. ‘تخريج الإحياء’ (1ஃ6) . ‘الضعيفة’ (16) .
8 (எனது சமுதாயத்தில் இருசாரார் இருக்கிறார்கள், அவர்கள் இருவரும் சீராக இயங்கினால் மனித சமுதாயம் அனைத்தும் சீராக இயங்கும், அவ்விருவர் தலைவர்கள், அறிஞர்கள் ஆவர்) இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களில் ஒருவர் பெரும் பொய்யர், ஹதீஸை இட்டுக்கட்டிச் சொல்பவர் என்று இமாம் அஹ்மத் பின் ஹம்பல் கூறினார்கள் அஹ்மத் பின் ஹம்பல் போலவே இப்னு முஈனும் தாரக்குத்னியும் கூறியுள்ளளார்கள், அல்பானி அவர்கள் இது இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ் என்று கூறியுள்ளார்கள். ”தக்ரீஜுல் அஹ்யா” (6 /1) ”அழ்ழயீஃபா” (16)
((توسلوا بجاهي ، فإن جاهي عند الله عظيم)). قال ابن تيمية والألباني : لا أصل له.’اقتضاء الصراط المستقيم’ لابن تيمية (2ஃ415) . ‘الضعيفة’ (22) .
9 (எனது கண்ணியத்தைக் கொண்டு அல்லாஹ்விடம் உதவி தேடுங்கள் அல்லாஹ்விடம் எனது கண்ணியம் மகத்தானது) இப்னுத் தைய்மிய்யாவும் அல்பானியும் இந்த ஹதீசுக்கு எந்த ஒரு அஸலும் இல்லை எனக் கூறியுள்ளார்கள். இப்னுத் தைய்மிய்யாவுக்குரிய ”அஸ்ஸிராத்துல் முஸ்தகீம்” (415 /2) ”அழ்ழயீஃபா”(22)
10- ((من خرج من بيته إلى الصلاة فقال : اللهم إني أسألك بحق السائلين عليك، وأسألك بحق ممشاي هذا ……… أقبل الله عليه بوجهه واستغفر له ألفُ ملكٍ)). ضعفه المنذري، قال البوصيري: سنده مسلسل بالضعفاء. قال الألباني : ضعيف. ‘الترغيب والترهيب’ للمنذري (3ஃ272) . ‘سنن ابن ماجه’ (1ஃ256) .
10 (உன்னிடம் கேட்க்கக்கூடியவர்களுடைய உரிமையைக் கொண்டும் என்னுடைய இந்த நடையைக் கொண்டும் கேட்க்கிறேன் என்று கூறி யாரேனும் வீட்டைவிட்டு புறப்பட்டால் அல்லாஹ் அவனுடைய திருமுகத்தைக் கொண்டு அவரை முன்னோக்குகிறான், ஆயிரம் மலக்குகள் அவருக்காக பாவமன்னிப்புத் தேடுகிறார்கள்) அல்முன்திர் அவர்கள் இதை பலவீனமான ஹதீஸ் என்றும், இதன் அறிவிப்பாளர் தொடர் பலவீனமானவர்களைக் கொண்டது என்று பூஸீரீ அவர்களும் அல்பானி அவர்கள் இது பலவீனமானது என்றும் கூறியுள்ளார்கள். ”அத்தர்ஹீப் வத்தர்கீப்” (272/3) ”சுனன் இப்னு மாஜா” (256 /1)

Post a Comment