இட்டுகட்டப்பட்ட ஹதீஸ்கள் (தொடர்-6)

0 comments

100 இட்டுகட்டப்பட்ட ஹதீஸ்கள் (தொடர்-6)


51 – ((اطلبوا العلم ولو بالصين)) . موضوع . ‘الموضوعات’ لابن الجوزي (1ஃ215) . ‘ترتيب الموضوعات’ للذهبي (111) . ‘الفوائد المجموعة’ (852) .

51 (சீனா சென்றேனும் கல்வியைத் தேடு) என்ற இந்த ஹதீஸ் இப்னு ஜவ்ஸி அவர்களுக்குரிய ”மவ்ழூஆத்’ என்ற நூலில் (1/215)ம் பக்கத்திலும், தஹபி அவர்களுக்குரிய ”அல்மமவ்ழூஆத்’ என்ற நூலில் (111)ம் பக்கத்திலும் ”அல்ஃப வாயிதுல் மஜ்மூஆ’ என்ற நூலில் (852)(2/30) ம் பக்கத் திலும் இட்டுக்கட்டப் பட்டது என்றுள்ளது.

52- ((شاوروهن – يعني: النساء – وخالفوهن)) . لا أصل له . ‘اللؤلؤ المرصوع’ (264) . ‘تذكرة الموضوعات’ (128) . ‘الأسرار المرفوعة’ (240).

52 (உங்கள் மனைவியரிடம் ஆலோசனை செய்யுங்கள், அதற்கு மாறு செய்யுங்கள்) என்ற இந்த ஹதீஸ் ”அல்லுலுஃலுஉல் மர்சூஃ’ என்ற நூலில் (264)ம் பக்கத்திலும், ”தத்கிரதுல் மவ்ழூஆத்’ என்ற நூலில் (128)ம் பக்கத்திலும் ”அல் அஸ்ராருல் மர்ஃபூஆ’ என்ற நூலில் (240) ம் பக்கத்திலும் ஆதார அடிப்படை அற்றது என்றுள்ளது.

53- ((يدعى الناس يوم القيامة بأمهاتهم ستراً من الله عز وجل عليهم)) . موضوع . ‘اللآلئ المصنوعة’ للسيوطي (2/449) . ‘الموضوعات’ لابن الجوزي (3/248) . ‘ترتيب الموضوعات’ (1123) .

53 (மறுமை நாளில் மக்கள் தங்களின் தாயைக் கொண்டு அழைக்கப்படுவார்கள், இது அல்லாஹ் அவர்களின் குறையை மறைப்பதற்காக!) என்ற இந்த ஹதீஸ் சுயூத்தி அவர்களுக்குரிய ”அல்லஆலில் மஸ்னூஆ’ என்ற நூலில் (2/449) ம் பக்கத்திலும், இப்னுல் ஜவ்ஸி அவர்களுக்குரிய ”அல் மவ்ழூஆத்’ என்ற நூலில் (3/248)ம் பக்கத்திலும் ”தர்தீபுல் மவ்ழூஆ’ என்ற நூலில் (1123) ம் பக்கத்திலும் இட்டுக்கட்டப்பட்டது என்றுள்ளது.

54- ((السلطان ظل الله في أرضه، من نصحه هدي ، ومن غشه ضل)). موضوع . ‘تذكرة الموضوعات’ للفتني (182) . ‘الفوائد المجموعة’ للشوكاني (623) . ‘الضعيفة’ (475) .

54 (அரசர்கள் அல்லாஹ்வின் பூமியில் அல்லாஹ்வுடை நிழல் ஆவார்கள், அவர்களுக்கு யார் நலம் நாடுகிறாரோ அவர் நேர்வழி பெறுவார், அவர்களுக்கு யார் மோசம் செய்கிறாரோ அவர் வழி தவறிப்போவார்) என்ற இந்த ஹதீஸ் அல் ஃபத்னா அவர்களுக்குரிய ”தத்கிரதுல் மவ்ழூஆத்’ என்ற நூலில் (182)ம் பக்கத்திலும், ஷவ்கானி அவர்களுக்குரிய ”அல்ஃபவாயிதுல் மஜ்ழூஆ’ என்ற நூலில் (623)ம் பக்கத்திலும் ”அழ்ழயீஃபா’ என்ற நூலில் (475) ம் பக்கத்திலும் இட்டுக்கட்டப்பட்டது என்றுள்ளது.

55- ((من خاف الله خوف الله منه كل شيء ، ومن لم يخف الله خوفه الله من كل شيء)) . ضعيف . ‘تخريج الإحياء’ للعراقي (2/145) . ‘تذكرة الموضوعات’ (20) . ‘الضعيفة’ (485) .

55 (அல்லாஹ்வை யார் பயப்படுகிறாரோ அவருக்கு எல்லாப் பொருளையும் பயப்படும்படியாக அல்லாஹ் ஆக்கிவிடுகிறான், அல்லாஹ்வை யார் பயப்படவில்லையோ எல்லாப் பொருள்களையும் அவர் பயப்படும்படியாக அல்லாஹ் ஆக்கி விடுகிறான்) என்ற இந்த ஹதீஸ் அல்இராகி அவர்களுக்குரிய ”தஃக்ரீஜுல் அஹ்யா’ என்ற நூலில் (2/145) ம் பக்கத்திலும், ”தத்கிர துல் மவ்ழூஆத்’ என்ற நூலில் (20)ம் பக்கத்திலும் ”அழ்ழயீஃபா’ என்ற நூலில் (485) ம் பக்கத்திலும் பலவீனமானது.

56- ((قال الله تبارك وتعالى : من لم يرض بقضائي ويصبر على بلائي، فليتمس رباً سوائي)) . ضعيف . ‘الكشف الإلهي’ للطرابلسي (1/625) . ‘تذكرة الموضوعات’ (189) . ‘الفوائد المجموعة’ (746) .

56 (ஒருவர் எனது தீர்வை திருப்தி கொள்ளாமலும் எனது சோதனையை பொறுத்துக் கொள்ளாமலும் இருப்பாரானால் அவர் நான் அல்லாத வேறு ஒரு இறைவனைத் தேடிக் கொள்ளட்டும்) என்ற இந்த ஹதீஸ் தராபல்ஸி அவர்களுக்குரிய ”கஷ்ஃபுல் இலாஹி’ என்ற நூலில் (1/625) ம் பக்கத்திலும் ”தத்கி ரதுல் மவ்ழூஆத்’ என்ற நூலில் (189) பக்கத்திலும், ”அல்ஃபவாயிதுல் மஜ் மூஆ’ என்ற நூலில் (746) ம் பக்கத்திலும் பலவீனமானது என்று உள்ளது.

) 57- )ليس لفاسق غيبة)) . موضوع . ‘الأسرار المرفوعة’ للهروي (390) . ‘المنار المنيف’ لابن القيم (301) . ‘الكشف الإلهي’ (1/764 .(

57 (பாவி புறம்பேசுவதால் ஒன்றும் பிரச்சனை இல்லை) என்ற இந்த ஹதீஸ் ஹர்வி அவர்களுக்குரிய”’அல்அஸ்ராருல் மர்ஃபூஆ’ என்ற நூலில் (390) பக்கத்திலும், இப்னுல் கய்யிம் அவர்களுக்குரிய அல்மனாருல் முனீஃப்’ என்ற நூலில் (301) ம் பக்கத்திலும் கஷ்ஃபுல் இலாஹி’என்ற நூலில் ((1/764 ம் பக்கத்திலும் இட்டுக்கட்டப்பட்டது என்று உள்ளது.

)) 58- إذا مات الرجل منكم فدفنتموه فليقم أحدكم عند رأسه. فليقل: يا فلان بن فلانة! فإنه سيسمع ، فليقل : يا فلان بن فلانة! فإنه سيستوي قاعداً …. اذكر ما خرجت عليه من دار الدنيا: شهادة أن لا إله إلا الله وحده لا شريك له … الخ)) . ضعيف . ‘تخريج الإحياء’ (4/420) . ‘زاد المعاد’ لابن القيم (1/206) . ‘الضعيفة’ (599 .

58(மரணமடைந்த ஒருவரை நீங்கள் அடக்கம் செய்துவிட்டால் உங்களில் ஒருவர் அவர் தலைப் பக்கத்தில் நின்று கொண்டு இன்னவளின் மகன் இன்னவனே என்று சொல்லட்டும் அப்படிக் கூறினால் அதை அவன் கேட்பான் பின்னர் அவன் நன்கு சரியாக அமர்வான், அப்போது அவனிடம் நீ உலகத்தில் இருந்த போது வணக்கத்திற்குத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை அவன் தனித்தவன் என்று கூறிக் கொண்டிருந்தாய் அல்லவா அதை நினைத்துப் பார் என்று கூறவேண்டும்) என்ற இந்த ஹதீஸ் தக்ரீஜுல் அஹ்யா’என்ற நூலில் (4/420) ம் பக்கத்திலும் இப்னுல் கய்யூம் அவர்களுக்குரிய ஸாதுல் மஆத்’ என்ற நூலில் (1/206) பக்கத்திலும்,’அழ்ழயீஃபா’ என்ற நூலில் (599) ம் பக்கத்திலும் பலவீனமானது என்று உள்ளது.

59- ((ما خاب من استخار ، ولا ندم من استشار ولا عال من اقتصد)). موضوع . ‘الكشف الإلهي’ (1/775) . ‘الضعيفة’ (611 . (

59 (நன்மை தேடி தொழுதவன் நஷ்டமடையமாட்டான், ஆலோசனை செய்து நடந்து கொண்டவன் கைசேதம் அடையமாட்டான், நியாயமாக நடந்து கொள்பவன் ஏழ்மையடையமாட்டான்) என்ற இந்த ஹதீஸ் ”கஷ்ஃபுல் இலாஹி’ என்ற நூலில் (1/775) ம் பக்கத்திலும் ” அழ்ழயீஃபா” என்ற நூலில் (611 பக்கத் திலும்இட்டுக்கட்டப்பட்டது என்று உள்ளது.

60- ((كان إذا أخذ من شعره أو قلم أظفاره ، أو احتجم بعث به إلى البقيع فدفن)) . موضوع . ‘العلل’ لابن أبي حاتم (2ஃ337) . ‘الضعيفة’ (713)

60 (நபி(ஸல்)அவர்கள் தங்களின் முடியை வெட்டினால் அல்லது நகத்தை துண்டித்தால் அல்லது இரத்த்தை வெளியேற்றினால் அதை ஜன்னத்துல் பகீஃக்கு கொண்டு சென்று புதைக்கும்படி கூறுவார்கள்) என்ற இந்த ஹதீஸ் இப்னு அபீ ஹாதிம் அவர்களுக்குரிய ”அல் இலல்’ என்ற நூலில் (2/337) ம் பக்கத்திலும் ”அழ்ழயீஃபா’ என்ற நூலில் (713)பக்கத்திலும் இட்டுக்கட்டப்பட் டது என்று உள்ளது.


Post a Comment

Contact us