அல்குர்ஆன் வழியில் அறிவியல்

0 comments
 அல்குர்ஆன் வழியில் அறிவியல்


கருந்துளை மர்மங்கள் ( BLACK HOLE)

அறிவார்ந்த நெறிநூலான அல்குர்ஆனில் ஏராளமான அறிவியல் உண்மைகளை உலக மக்களுக்குக் கூறி நேர்வழிக்கு அல்லாஹ் அழைக்கின்றான். போலி பொய்த் தெய்வங்களைப் புறந்தள்ளி, உங்களையும், உலகத்தையும், மாபெரும் பிரபஞ்சத்திலுள்ள சூரிய சந்திர, நட்சத்திரங்கள், கலாக்ஸிகளைப் படைத்தவனை மட்டும் வணங்குங்கள் என்று அறிவியல் உண்மைகளைக் கொண்டு உரைக்கின்றான்.
மனித சமுதாயம் நேர்வழி பெற வேண்டும் என்பதற்காக அல்குர்ஆனில் தனது வழிகாட்டும் வசனங்களை விவரித்துக் கூறுகிறான். தான் கூறும் உண்மைகளை மேலும் உறுதிப்படுத்து வதற்கும் கூடுதல் முக்கியத்துவம் கொடுப்பதற்கும், தான் படைத்த படைப்புக்கள் மீது சத்தியமிட்டு சொல்கிறான். படைப்புக்கள் மீது சத்தியம் செய்யும் வசனங்களை குர்ஆனில் பரவ லாகக் காணலாம். உதாரணமாக, காலத்தின் மீது சத்தியமாக 103:1 இரவு, பகல் மீது சத்தியமாக 92:1 வானத்தின் மீது 86:1 மறுமை நாள் மீது 75:1 என்று பல்வேறு இடங்களில் தன் படைப்புகளின் மீது சத்தியமிட்டுச் சொல்கிறான். குர்ஆனில் அல்லாஹ் சொல்லும் சத்தியங்களிலேயே மிக மகத்தான சத்தியமாக ஒரு செய்தியைக் குறிப்பிடுகிறான்.
நட்சத்திரங்கள் மறையும் இடங்களின் மீது நாம் சத்தியம் செய்கின்றோம். (உங்களுக்கு) அறிவிருந்தால் இது ஒரு மகத்தான சத்தியம் என்பதை தெரிந்து கொள்வீர்கள்.அல்குர்ஆன் 56:75, 76
“”(ஒளி இழந்து) விழுந்து மறையும் நட்சத்திரங்கள் மீது சத்தியமாக!அல்குர்ஆன் 53:1
“”நிச்சயமாக நாம் தாழ்வாக உள்ள வானத்தைச் சுடரிடும் நட்சத்திரங்களைக் கொண்டு அழகுபடுத்தி வைத்துள்ளோம்என்று 37:6ல் அல்லாஹ் கூறுகிறான். இரவில் வானத்தைப் பார்த்தால் கோடானு கோடி நட்சத்திரங்கள் நம்மை பார்த்து கண்சிமிட்டுகின்றன. இதற்குக் காரணம் நட்சத்திரங்களில் ஏற்படும் அணுப் பிளவின் காரணமாக வெப்பமும் ஒளியும் உண் டாகிறது. நமது சூரியனும் ஒரு சிறிய நட்சத்திரமாகும். நமது சூரியனை விட கோடானு கோடி மடங்கு மிகப் பிரமாண்டமான நட்சத் திரங்கள் தங்களிடமுள்ள எரிபொருளான ஹைட்ரஜன், ஹிலியம் வாயுவை இழந்து முற்றிலும் அழியும் நிலையில் அதனுடைய அடர்த்தி அதிகரிக்கும்; அத்துடன் அதன் உள் ஈர்ப்பு விசை ஆற்றல் பன்மடங்காக பெருகி விடும். அதனுள் ஈர்க்கப்படும் எப்பொருளும் மீண்டு வருவதில்லை. இவ்வாறு எரிதிறனை இழந்து அழிந்து மறையும் நட்சத்திரம் கருந்துளையாக மாறுகிறது.

கருந்துளை எனும் மர்மக் குகை:
20ம் நூற்றாண்டில் விண்வெளியில் கண்டுபிடிக்கப்பட்ட ஆச்சரியமான அதிசயங்களில் பிரதானமாக விளங்குவது கருந்துளைகள் மட்டுமே என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இக்கருந்துளைகள், மிகப் பிரமாண்டமான நட்சத்திரங்களின் இறுதி கட்ட நிகழ்வாக கருதப்படுகிறது. இதற்கு கன அளவோ மேற் பரப்போ கிடையாது. கண்ணாலோ, தொலை நோக்கியாலோ எவரும் பார்க்க முடியாது.
கருந்துளையின் எல்லைக்குச் செல்லும் ஒளி உட்பட எப்பொருளும் மீண்டு வெளியேற முடியாது. இவற்றின் ஈர்ப்பு ஆற்றலைக் கணக்கிட ஓர் உதாரணத்தைப் பார்ப்போம்.
பொதுவாக நமது பூமிக்கும் புவியீர்ப்பு ஆற்றல் உள்ளது. எப்பொருளையும் நாம் ஆகாயத்தை நோக்கி எறிந்தால் அது மீண்டும் பூமியில் விழுந்து விடும். இந்த புவியீர்ப்பு விசையை மீறிச் செல்ல வேண்டுமாயின் ஒரு வினாடிக்கு 11 கிலோ மீட்டர் வேகம் வேண்டும். (மணிக்கு 40,000வது-24000 மைல்) பூமியில் இருந்து விண்ணை நோக்கி செலுத்தப்படும் செயற்கை கோள் ராக்கெட்டுகள் வினாடிக்கு 11வது வேகத்திலேயே செலுத்தப்பட்டு வருகின்றன. பிரபஞ்சத்தில் உள்ள வேகங்களில் மிக உயர்ந்தபட்ச வேகம் ஒளியின் வேகம்தான். ஒளி ஒரு வினாடியில் 1,86000 மைல் (3,00000km) செல்கிறது. நமது கருந்துளையின் ஈர்ப்பு ஆற்றல் விசையும் 1,86000 மைல்/ வினாடியில் உள்ளது. எனவே கருந்துளைக்குள் செல்லும் ஒளி மீண்டு வருவதில்லை. கருந் துளை எனும் குகைக்குள் செல்லும் எதுவும் மீண்டு வர முடியாது. அங்கு என்ன நடக்கிறது என்பதும் எவர்க்கும் புரியாத புதிர். நட்சத்திரங்கள் மறைந்து அழிந்து தோன்றும் கருந்துளையின் மீது அல்லாஹ் மகத்தான சத்தியம் செய்வதிலிருந்து இதன் பிரமாண்டத்தை புரிந்து கொள்ளலாம்.
கடந்த 2008 மார்ச் 18ல், நமது பிரபஞ்சத்திலேயே மிகப் பிரமாண்டமான “”கலாக்ஸி கிளாசிக்” (Galaxy Classic)) எனும் கருந்துளையை ஆய்வாளர்கள் கண்டு பிடித்தனர்.
இந்த கருந்துளையின் பரிமாணம் மிகப் பிரமாண்டமானது. நமது சூரியன் விட்டம் 1,39,0000 வது. இதைவிட 1800 கோடி மடங்கு மிகப் பெரியது. நமது பூமியில் இருந்து 3.5 பில்லியன் அதாவது 350 கோடி ஒளி ஆண்டு தொலைவில் உள்ளது. ஒளி ஆண்டு என்பது, ஒளி ஒரு வினாடியில் 1,86000 மைல் தூரம் செல்லும் இந்த வேகத்திலேயே தொடர்ந்து 1 வருடம் எவ்வளவு தூரம் பயணம் செய்யுமோ அதுவே ஒரு ஒளி ஆண்டு தூரம். சொற்ப அறிவு கொடுக்கப்பட்ட நமக்கு இதன் பிரமாண்டம் நம் கற்பனைக்கு எட்டாத ஒன்று.
கருந்துளைகளை நம் கண்களால் காண முடியாது என்றாலும் இதன் நிகழ்வெல்லைக்கு (Event Horizon)அப்பால் இருக்கும் பிற நட்சத்திரங்கள், மற்ற விண் பொருட்களின் மீது அவை கொண்டுள்ள தாக்கங்கள் மூலம் கருந்துளை இருப்பிடத்தை அறிந்து கொள்ளலாம். உதாரணமாக ஒரு தொகுதி விண்மீன்கள் கருந்துளையின் ஈர்ப்புக்கு உட்பட்டு அதன் மையத்தைச் சுற்றி வருவது உண்டு. இவ்வாறான விண்மீன்களின் இயக்கத்தை கூர்ந்து நோக்குவதன் மூலம் கருந்துளையின் இருப்பையும் அதன் அமைவிடத்தையும் அறிந்து கொள்ளலாம். சில வேளைகளில் கருந்துளைகள் அண்டவெளியில் இருந்து அல்லது அண்மையில் இருக்கும் விண்மீன்களில் இருந்து வரும் வளிமத்தூசுகளை கவர்ந்து இழுக்கின்றன. இவ்வளிமங்கள் கருந்துளையைச் சுற்றி வேகமாக உட்செல்லும் போது வெப்பநிலை அதிகரிப்பதனால் பெருமளவு கதிர்வீச்சு வெளிப்படுகிறது. இவற்றை புவி, அல்லது விண்வெளி தொலை நோக்கி மூலம் உணர முடியும்.
வானில் உள்ள கோடானு கோடி நட்சத்திரங்களில் அல்லாஹ் நாடியவை தன் எரிபொருளை இழந்து அடர்த்தி அதிகமாகி கருந்துளையாக மாறலாம். பிரபஞ்சத்தில் ஏராளமான கருந்துளை உள்ளன. மற்ற நட்சத்திரங்கள், அல்லாஹ் கூறும் (கியாமத் நாள்) இறுதி நாளில் ஒளி இழந்து உதிரும். நமது சூரியனின் இறுதி முடிவும் இவ்வாறே. அல்லாஹ் அறிந்தவன்!
“”நட்சத்திரங்கள் அழிக்கப்படும்போது, மேலும் வானம் பிளக்கப்படும் போது, அன்றியும் மலைகள் (தூசுகளைப் போல்) பறக்கப் படும்போது” 77:8,9 (அந்நாளில்) சந்திரன் ஒளி மங்கி, சூரியனும் சந்திரனும் ஒன்று சேர்க்கப்படும். அல்குர்ஆன் 75:4,9

இடி மின்னல் வழங்கும் இயற்கை உரம்.
அல்லாஹ்வின் நெறிநூலான அல்குர்ஆனில் அறிவியல் உண்மைகள், ஆய்வு வழிகாட்டு தல்கள் ஏராளமாக உள்ளன. அல்குர்ஆனை அறிவியல் நோக்கோடு ஆராயும்பொழுது அனேக நன்மைகளை மனித சமுதாயத்திற்கு அளிக்க முடியும். இதன் மூலம் நேர்வழியில் மக்கள் வருவதற்கு வாய்ப்பும் உள்ளது. ஆனால் துர்பாக்கியமாக, இன்று அல்குர்ஆன் வெறும் வணக்க வழிபாட்டு நூலாக மதரஸா முல்லாக்களிடம் முடக்கப்பட்டுள்ளது.
பொதுவாக, தொழுகை, நோன்பு, ஜக்காத், ஹஜ் போன்ற வணக்கங்கள் பற்றி அல்லாஹ் குறிப்பிடும் பொழுது இவைகளை கடமையாக விதித்து கடைபிடிக்கக் கட்டளையிடுகின்றான். இது போன்ற வசனங்களை ஆராய்ந்து பார், சிந்தித்துப் பார் என்று அல்லாஹ் கூறுவதில்லை. ஆனால் அல்லாஹ்வின் ஆற்றலை, அவனது படைப்புகளை, வல்லமையைப் பற்றி கூறும் ஆயிரக்கணக்கான வசனங்களில் நம்மை அவன் சிந்தித்துப் பார்க்க, ஆராய்ந்து கவனித்துப் பார்க்க வேண்டுகிறான். இவ்வசனங்களை ஆராய புரோகித உலமாக்களுக்கு தகுதியும் இல்லை. ஆர்வமும் இல்லை. ஏனெனில் இம்மதரஸாக்கள் உண்மையான ஆலிம்களை உருவாக்குவதற்குப் பதிலாக இமாமத் புரோகித கூலி ஆலிம்களை உற்பத்தி செய்கிறது.

“”(உங்களுக்கு) பயத்தையும், ஆதரவையும் தரக்கூடிய மின்னலை அவனே உங்கள் முன் பிரகாசிக்கச் செய்கிறான். (மழையை) சுமந்த பளுவான மேகங்களையும் அவனே உண்டாக்குகிறான்.’’ அல்குர்ஆன் 13:12
நயமும், பயமும் தரக்கூடியவாறு மின்னலை அவன் உங்களுக்கு காண்பிப்பதும், மேகத்திலிருந்து மழையைப் பொழியச் செய்து இறந்த பூமியை செழிக்கச் செய்வதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளனவாகும். அறிவுடைய மக்களுக்கு நிச்சயமாக இதில் (ஒன்றல்ல) பல அத்தாட்சிகள் இருக்கின்றன.’’ அல்குர்ஆன் 30:24
மேற்கண்ட இரு வசனங்களிலும் மின்னல் நயமும், பயமும் ஆதரவும் தருவதாக அல்லாஹ் குறிப்பிடுகின்றான். மின்னல் வெட்டின் பிரகாசமான ஒளிக் கீற்று கண் பார்வையைப் பறிப்பது போன்று பயத்தை நமக்குக் கொடுக்கிறது. மேலும் மின்னல் நமக்கு ஆதரவு, உதவியும் செய்கிறது என்று அல்லாஹ் கூறுகிறான். அது என்ன ஆதரவு என்பதை அறிவியல் கண் கொண்டு பார்ப்போம்.
மின்னல் எப்படி உருவாகிறது?
மழைக் காலங்களில் மேகங்களிடையே ஏற்படும் மிகப்பெரிய தீப்பொறி போன்ற மின் பொறிக் கீற்று, கண்களைப் பறிக்கும் ஒளிவீச் சோடு கோடுகளாய் வானில் கிளைத்து நொடிப் பொழுதில் தோன்றி மறையும் நிகழ்ச்சிதான் மின்னல். மழை மேகங்கள், தமக்குள் இருக்கும் அணுக்கள் பல வழியிலும் உராய்ந்தோ, பிறவாறோ மின்னூட்டம் பெற்று விடுகின்றன. எவ்வாறு மின்னூட்டம் பெறுகிறது என்ற வழிமுறை இன்னும் ஆய்வாளர்களால் அறிய முடியவில்லை. ஆனால் இப்படி மின்னூட்டம் பெற்று அது அதிகமாகி வரும்போது மின்னூட்ட ஈர்ப்பு விசையால் காற்று வழியே மின் ஆற்றல் பாய்ந்து மின்னோட்டத்தை இழக்கின்றன.
இவ்வாறு காற்று வழியே மின்னூட்டம் பாயும் பொழுது மின்பொறியாய் (தீப் பொறிகளாக) ஒளி விடுகிறது. ஒளிக் கீற்று போல் ஒளி இழைகளாய் தெரியும் பகுதியில் காற்று மின்மயமாக்கப்படுகிறது. ((Ionised)  மின்னலின் போது சுமார் 300000c வெப்பம் ஏற்படுகிறது.(இவ்வெப்பம் சூரியனின் மேல் பகுதியில் உள்ள வெப்பத்தைப் போன்று மூன்று மடங்கு) நமது காற்று மண்டலத்தில் 78% நைட்ரஜன் வாயு உள்ளது. சுமார் 21% ஆக்ஸிஜன் உள்ளது. மின்னலின் போது ஏற்படும் வெப்பமானது காற்றில் உள்ள நைட்ரஜனில் கடினமான அணுக்களை உடைத்து ஆக்சிஜனுடன் சேர்ந்து நைட்ரஜன் சேர்மங்களான அமோனியா, நைட்ரேட், நைட்ரஸ் ஆக்ஸைடாக மாற்றுகிறது. இவை உயிர் உள்ள தாவரங்கள், மிருகங்கள், மனிதர்களுக்குத் தேவையான அமினோ அமிலம், புரோட்டின், டி.என்.ஏ. உற்பத்திக்கு மிக அவசியமான ஒன்றாகும்.
இப்படி மின்னலினால் உண்டாகும் இயற்கை உரமான அமோனியா நைட்ரேட்கள் வருடத்திற்கு 10 மில்லியன் மெட்ரிக் டன்னாக உள்ளது என்று ஆய்வுகள் கூறுகின்றன. இந்த இயற்கை உரங்கள் மழை நீரில் கலந்து பயிர்கள் தாவரங்களில் சேர்ந்து நல்ல விளைச்சலைக் கொடுத்து நமக்கு ஆதரவாக உள்ளது. ஆண்டு தோறும் சுமார் 20 மில்லியன் இடி மின்னல் உலகெங்கும் உருவாகிறது. சுமார் 8,60,000 மின்னல்கள் தினமும் பளீரிடுகிறது.
மின்னலினால் உருவாகும் இயற்கை உரத்தை ஐரோப்பிய நாடுகள் தங்களுக்குள் பகிர்ந்து கொள்ள EULINOX என்ற அமைப்பை (EUROPIAN LIGHTING NITROGEN OXIDE PROJECT)  ஏற்படுத்தி ஆய்வு செய்கிறார்கள். கடந்த 19ம் நூற்றாண்டு வரை இறைவன் வழங்கிய இயற்கை உரத்தையும், மக்கிய குப்பை, ஆடு, மாடு, கழிவுகள் போன்ற பசுந்தாள் உரங்களைக் கொண்டே பயிர் விளைச்சலை அதிகப்படுத்தினர். 100 வருடங்களுக்கு முன்னர் நிலத்தடி நீர், நிலம், கடல் எதுவும் இரசாயன மாசுபடாமல் தூய்மையாக இருந்து மக்களுக்கு உதவின. 20ம் நூற்றாண்டில் செயற்கை இரசாயன உரங்கள் பூச்சிக் கொல்லி மருந்துகள் அனைத்தும் விளைநிலங்களில் தொடர்ந்து கொட்டி சுற்று சூழலை மாசுபடுத்தி விட்டனர்.
குறிப்பாக, இந்தியாவில் கடந்த 40 ஆண்டுகளில் பசுமைப் புரட்சி என்ற பெயரில் ரசாயன உரங்களை மண்ணில் இட்டு, மண்ணில் உள்ள கோடிக்கணக்கான மண் புழுக்களையும், நுண்ணுயிரிகளையும் கொன்றுவிட்டனர். உண்ணும் விளை பொருட்கள் மீது விமான பூச்சி மருந்துகளை அடித்து உண்ணும் உணவு விஷம், தண்ணீர் விஷம், சுவாசிக்கும் காற்றும் விஷமாகியது. இறைவன் வழங்கிய இயற்கை வளங்களான தண்ணீர் கூட இன்று விலை பேசி விற்கப்படுகிறது.
அளவிற்கதிகமான நைட்ரஜன் கடலில் கலப்பதால், 100 வருடங்களுக்கு முன்பு நைட்ர ஜன் அளவை விட சுமார் 50 மடங்கு அதிகம் கடல் நீரில் உள்ளது. மெக்ஸிகோ வளைகுடா கடற்பரப்பில் நைட்ரஜன் தொடர்ந்து கலப்பதால் சுமார் 5800 ச.கிலோ மீட்டர் கடல் நீரானது உயிரினங்கள் வாழ முடியாத செத்த கடலாய் (DEAD ZONE) மாறி விட்டது.
மனிதனின் சுயநலம், பேராசையின் காரணமாக பூமியின் நிலம், நீர், காற்றை மாசு படுத்தி வருகிறான். இதன் காரணமாக கடும் எதிர் விளைவுகளான, வெப்பச் சூடேற்றம் (Global Warming)  கடும் புயல், நில நடுக்கம், சுனாமி, உயிர்க் கொல்லி நோய்கள் தொடர்கின்றன. அல்லாஹ் மனிதர்களுக்கு அணுவளவும் தீங்கிழைப்பதில்லை. ஆனால் மனிதன் தனக்குத்தானே தீங்கிழைத்துக் கொள்கிறான்.
மனிதர்களில் கைகள் தேடிக்கொண்ட (தீச் செயல்களின்) காரணத்தால் கடலிலும் தரையிலும் (நாசமும்) குழப்பமும் தோன்றின் (தீமைகளிலிருந்து) அவர்கள் திரும்பிவிடும் பொருட்டு அவர்கள் செய்தார்களே (தீவினைகள்) அவற்றில் சிலவற்றை (இவ்வுலகிலும்) அவர்கள் சுவைக்கும்படி அவன் செய்கிறான். அல்குர்ஆன் 13:12

அல்குர்ஆனில் புதைந்து கிடக்கும் விஞ்ஞானம்!

இம் மண்ணில் வாழும் உயிர்ப் பிராணிகள் எவ்வாறு உருவாயின என்பதனை பலர் பலவிதமானக் கருத்துக்கள் கூறுவதைக் காண முடிகிறது. அல்குர்ஆன் கூறுவதையும், ஆராய்ந்து பார்த்த விஞ்ஞானிகள் கூறுவதையும் பார்ப்போம்.
“”அனைத்து உயிர்ப் பிராணிகளையும், அல்லாஹ் நீரிலிருந்து படைத்தான். அவற்றில் வயிற்றின் மீது நடப்பவையும் உண்டு. இரு கால்களால் நடப்பவையும் உண்டு; அவற்றில் நான்கு கால்களில் நடப்பவையும் உண்டு.(இவ்வாறு)தான் நாடியதை நாடியதிலிருந்து அல்லாஹ் படைக்கிறான். நிச்சயமாக அல்லாஹ் அவ்வாறு படைக்கும் பொருட்டு யாவற்றின் மீதும் ஆற்றலுள்ளவன். (அல்குர்ஆன் 24:45)
முட்டை முன்பு வந்ததா? குஞ்சு முன்பு வந்ததா? என்று இன்றும் தங்களை குழப்பிக் கொண்டு இருப்பவர்கள் இத்தகைய இறை வசனத்தின் மூலம் தெளிவு பெறமுடியும்.
அல்லாஹ் கூறுகிறான்: எல்லாப் பிராணிகளையும் நீரிலிருந்து படைத்துள்ளான். அவற்றில் ஊர்ந்து செல்லக் கூடியவையும், இரு கால்களில் நடப்பவையும், நான்கு கால்களில் நடப்பவையும் உண்டு என்று கூறுகிறான்.
ஊர்ந்து செல்வது பாம்பு, புழு,பூச்சிகளாகும். இரண்டு கால்கள் உடையவை பறவை இனங்களைக் குறிப்பிடுவது, நான்கு கால்களை உடையவை என்பது மிருகங்களை குறிப்பிடுவது.
அல்லாஹ் மிகத் தெள்ளத் தெளிவாகவே மனிதர்களுக்கு விளக்கியுள்ளான். இத்தகைய நிலைப்பாடுகளை அல்குர்ஆனிலிருந்து ஆராய்ச்சி செய்த பிரெஞ்ச் நாட்டு விஞ்ஞானி லமார்க்’ 1744 முதல் 1829 வரை ஆராய்ச்சி செய்துவிட்டு பரிணாமக் கோட்பாட்டை அறிவியல் பூர்வமாக வெளியிட்டுள்ளார். அதேபோல் 1809 முதல் 1888 வரை டார்வினும் ஆராய்ச்சி செய்துவிட்டு வான் மறையின் பரிணாமக் கோட்பாட்டை வலுவான ஆதாரங்களுடன் நிலைநாட்டுகிறார்.
“”நீர் நிலைகளிலிருந்து உயிரினங்கள் தோன்றியுள்ளன. மிக முந்திய செல் உயிரினங்கள் படிப்படியாக பல செல் உயிரினங்களாக மாறி அவற்றில் சில மேலும் மாற்றங்களை அடைந்து நீரை விட்டு வெளியேறி ஊர்வனவாகி பரிணாம மடைந்து விலங்கினங்களாகவும் பறவைகளாகவும் மாறினஎன ஆராய்ச்சியில் கூறுகின்றனர். இது விஞ்ஞானிகள் கதை.
அல்லாஹ் கூறுகிறான்.
அல்லாஹ் எவ்வாறு முதல் முறையாக படைக்கிறான் என்பதனையும், பிறகு எவ்வாறு அதை மீண்டும் படைக்கிறான் என்பதையும் அவர்கள் பார்க்கவில்லையா? நிச்சயமாக இது அல்லாஹ்வுக்கு மிக எளிதானதாகும்.” (அல்குர்ஆன் 29:19,20)
அல்லாஹ் தனது ஆற்றலை இவ்வாறு வெளிப்படுத்துகிறான். அல்லாஹ்விற்கு படைத்தல் என்பது எவ்விதக் கஷ்டமும் இல்லை. அவன் ஒன்றை நினைத்து உருவாக்க நினைத்தால் அது உடன் உருவாகிவிடும். விஞ்ஞான வளர்ச்சிகள் எவ்வளவு வந்தாலும் குர்ஆன் வசனங்களுக்கு மாற்றமாக எவ்வித விஞ்ஞானத்தையும் கண்டு பிடித்துவிட முடியாது.
சுமார் 1430 ஆண்டுகளுக்கு முன் உம்மி நபி என்று போற்றப்படும் நபி(ஸல்) அவர்கள் மூலமாக அல்லாஹ் எடுத்துரைத்த இத்தகைய அற்புதமான ஆராய்ச்சி வசனங்கள் இன்னும் ஏராளமாக அல்குர்ஆனில் புதைந்து கிடக்கின்றன.
இன்றைய காலங்களில் மழையைப் பற்றி ஆராய்ந்த விஞ்ஞானிகள் செயற்கை மழை பொழியும் திட்டத்தை உருவாக்கினார்கள். அதுவும் இறை வசனப்படியேதான் செய்ய முடிந்தது. மேகங்களின் கூட்டங்களை இணைக்கச் செய் வது. அதன் பிறகு அதனை குளிரச் செய்வது. மேகம் குளிர்ந்து விட்டால் தண்ணீராகி விடும். இவற்றைத்தான் விஞ்ஞானிகள் இந்த நூற் றாண்டில் செய்தார்கள்.
14 நூற்றாண்டுக்கு முன் அல்லாஹ்வின் அல்குர்ஆன் எவ்வாறு விளக்குகிறது என்பதனை பார்ப்போம்.
நபியே நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ் மேகத்தை இழுத்து, பின்னர் அவற்றை ஒன்றாக இணையச் செய்து, அதன் பின் அதை ஒன்றின் மீது ஒன்று சேர்ந்து அடர்த்தியாக்குகிறான். அதன் பிறகு அதன் நடுவேயிருந்து மழை பொழிவதைப் பார்க்கிறீர். இன்னும் அவன் வானத்திலிருந்து மழையைப் போல மேகக் கூட்டத்திலிருந்து பனிக் கட்டியையும் இறக்கி வைக்கின்றான். (24:43)
குர்ஆனின் வசனப்படியே செயற்கை மழை பொழிய வைக்கும் திட்டத்தை விஞ்ஞானிகள் செய்து காட்டினார்கள். மேலும் இந்த மேகக் கட்டியின் மூலமாகவே பனிக் கட்டிகள் இறங்குகின்றன என்பதனையும் அல்லாஹ் தெளிவு படுத்துகிறான். அது மட்டுமல்ல சமீப காலங்களில் அரசாங்கம் ஒரு திட்டத்துடன் ஒரு சட்டமும் கொண்டு வந்தது. அதுதான் மழைநீர் சேகரிப்புத் திட்டம். இது வல்ல இறைவன் 1430 ஆண்டுகளுக்கு முன் கொண்டு வந்த அற்புதச் சட்டம் என்பதனை இதோ அல்குர்ஆன் விளக்குகிறது.
“”இன்னும் காற்றுகளைச் சூழ் கொண்ட மேகங்களாக நாமே அனுப்புகிறோம். பின்னர் வானத்திலிருந்து நாம் மழை பொழிவித்து அதனை உங்களுக்கு நாம் (குடிநீராக) புகட்டுகிறோம். நீங்கள் அதனை சேகரித்து வைப்பவர்களாக இல்லை” ( அல்குர்ஆன்: 15:22)
மழைத் தண்ணீரை சேகரித்து வைத்திட வல்ல இறைவன் 1430 ஆண்டுகளுக்கு முன் அறிவித்துள்ளான். அந்த மழைதான் நமக்கு குடி நீராகவும் மண்ணில் விளையக்கூடிய பயிர்களுக்கு உயிராகவும் உள்ளது.
“”… வானத்திலிருந்து மழையைப் பொழியச் செய்து அதைக் கொண்டு பூமியை அது வரண்டு போனதை உயிர்ப்பிப்பதும் அவனது அத்தாட்சிகளில் உள்ளன. நிச்சயமாக அதில் சிந்தித்துணரும் மக்களுக்கு அத்தாட்சிகள் இருக்கின்றன.” (அல்குர்ஆன் 30:24)
வல்லோனின் அல்குர்ஆனில் ஒவ்வொரு எழுத்துக்களிலும் விஞ்ஞானத்தை விளக்கி காட்டுகிறது. இந்த இறைவசனம் இறங்கிய இடம் மழைகள், விவசாயங்கள் இல்லாத பாலைவனப் பிரதேசமாக அரேபியா என்பதனைக் கவனிக்க வேண்டும்.
தற்போது நமது அரசாங்கம் மழைநீர் சேகரிப்புத் திட்டத்தைச் சட்டமாகக் கொண்டு வந்துள்ளது. அல்குர்ஆனில் புதைந்துள்ள வசனம் விஞ்ஞானத்தின் ஓர் எடுத்துக்காட்டாகவே அமைந்து உள்ளது என்பதனை உணர முடிகிறது. அதனால்தான் அல்லாஹ் தன் வசனங்கள் பற்றிக் குறிப்பிடும் பொழுது இதனை சிந்திப்பவர்களுக்கு அத்தாட்சிகள் உள்ளன என்று கூறுகிறான்.
மேலும் பூமி தட்டையானது என்று இன்றும் நம் மெளலவிகள் கற்றுவரும் கல்விக் கூடங்களில் சொல்லித் தரப்படுகிறது. ஆனால் வல்ல இறைவன் தன் நெறிநூலில் “”நிச்சயமாக அல்லாஹ்தான் இரவை பகலில் புகுத்துகிறான். பகலை இரவில் புகுத்துகிறான்என்பதை நீர் பார்க்கவில்லையா?’ (31:29)
இரவு படிப்படியாக மெல்ல மெல்ல பகலுக்கு மாறுவதும், இதுபோல் பகல் மெல்ல, மெல்ல இரவுக்கு மாறுவதையும் பார்க்கும் போது பூமி உருண்டை வடிவம் கொண்டது தான் என்பதனை அல்லாஹ் மறைவாகவே குறிப்பிடுகிறான்.
இதனை முதன் முறையாக 1597ம் ஆண்டு கடல் பயணம் மேற்கொண்ட சர்ஃபிரான்ஸிஸ் டிரேச் என்ற விஞ்ஞானிதான் ஆராய்ந்து பூமி உருண்டை என்பதனை அறிவித்தார். பல நூற்றாண்டுகளுக்கு முன் அல்லாஹ்வின் அருள்நெறிநூல் குறிப்பிட்டதை இன்றைய விஞ்ஞானிகள் ஆராய்ந்து வெளியாக்கி யுள்ளார்கள். இதே நிலையில்தான் பூமி, சூரியன், சந்திரன் போன்றவற்றை உருவாக்கிய வல்ல இறைவன் அவற்றின் நிலைகளை குறிப்பிடும்போது சூரியனை மையமாகக் கொண்டே சுற்றி வருகின்றன மற்ற கோள்கள் என்று கூறுகிறான்.
பூமி தன்னைத்தானே சுற்றிக் கொள்வதற்கு 24 மணி நேரம் ஆகிறது. இதில்தான் இரவும்-பகலும் ஏற்படுகிறது. இந்த பூமியின் மீதுதான் உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளும் உள்ளன. இந்த பூமியின் மீது விழும் சூரியனின் ஒளிக் கதிர்கள்தான் 24 மணி நேரத்திற்குள் சுற்றி முடிக்கிறது. சூரியனின் ஒளியை சந்திரன் வாங்கி அதுவே ஒளியை பூமிக்கு அளிக்கிறது. அதைத்தான் அல்லாஹ் கூறுகிறான்.
“”சந்திரனை பிராசமாகவும், சூரியனை ஒளிக் கதிராகவும் அவனே ஆக்கியிருக்கின்றான்” ( 71:15,16)
மேலும் கூறுகின்றான் “”…. காலக் கணக்கை அறிவதற்காக சூரியனையும், சந்திரனையும் உண்டாக்கினான்….” (6:96)
சந்திரன் தன் அச்சின் மீது தன்னைத்தானே சுற்றிக் கொள்கிறது. பூமியை சுற்றி வருவதற்கு எடுக்கும் கால அவகாசம் 29.53059 நாட்கள் பிடிக்கின்றன என்று அறிவியல்பூர்வமாக கண்டுபிடிக்கப்பட்ட உண்மை. ஒரே சந்திரனை ஒரே நாளில் படிபடியாக உலகம் முழுவதும் வாழும் மக்களுக்கு, நாட்காட்டியாக மனாஜில்களாக தோற்றமளிக்கிறது என்பதனை குர் ஆனின் வசனங்களும் தெளிவாக்குகின்றன.
“”… இந்த குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா…” (47:24)
“”…. அவர்கள் இந்த குர்ஆனை சிந்திக்க வேண்டாமா?….” (4:82)
என்ற வசனங்கள் படியே விஞ்ஞானிகள் ஆராய்ந்து குர்ஆனில் புதைந்து கிடக்கும் அறிவியலை வெளிக்கொண்டு வருகின்றனர்.
“”ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு செல்வீர்கள்…”
என்று அல்குர்ஆனின் வசனப்படியே இன்று வின்வெளிக்குச் செல்லும் விண்கலன்களை கண்டுபிடித்து பூமி என்ற நிலையிலிருந்து விண் வெளியில் உள்ள மற்றொரு நிலையான சந்திரனுக்கும், மற்ற கிரகங்களுக்கும் ஆராய்ந்து பார்க்கவே சென்று வரக்கூடிய நிலைப்பாட்டையும் கண்டுள்ளார்கள்.
அல்குர்ஆன் புதைந்து கிடக்கும் விஞ்ஞானத்தில் இதுவும் ஒரு சான்றாகும். இன்னும் இன்ஷா அல்லாஹ் தொடர்ந்து பார்ப்போம்.

கால்நடைகள் வழங்கும் கதகதப்பு WOOL ஆடை
அல்லாஹ் மனிதர்களைப் படைத்து, அவர்களுக்கு வேண்டிய எல்லா வாழ்வாதாரங்களையும் ஏற்படுத்தியது மட்டுமல்லாது உலகில் உள்ள அனைத்தும் மனிதர்களுக்குப் பயன் தருபவைகளாக அமைத்துள்ளான். இந்த வகையில் கால் நடைகளைப் பற்றி அல்லாஹ் கூறுகின்றான்.
(மனிதர்களே!) ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற கால்நடைகளையும் அவனே உங்களுக்காக படைத்திருக்கின்றான். அவற்றில் உங்களுக்காக (குளிரைத் தடுத்துக்கொள்ளக்கூடிய) கத கதப்புண்டு; இன்னும்(அநேக) பயன்களுமுண்டு; மேலும் நீங்கள் அவற்றிலிருந்து புசிக்கிறீர்கள்.
அல்குர்ஆன் 16:5
மேலும் வேறொரு வசனத்தில்,
“”(ஆடை போன்ற) பற்பல பொருள்களையும் தயாரிப்பதற்கு அவற்றில் (செம்மறியாட்டின்) கம்பளி(ஒட்டகத்தின்) உரோமம், (வெள்ளாட்டின்) முடி, ஆகியவைகளையும் (அவன் உங்களுக்காக படைத்திருக்கின்றான். அவற்றாலான பொருள்கள்) ஒரு காலம் வரையில் உங்களுக்கு பயன்படுகின்றனஅல்குர்ஆன் : 16:80
மனிதனின் வாழ்விற்கு அடிப்படைத் தேவைகள் மூன்று; உணவு, உடை, உறைவிடம் இம் மூன்றும் கால்நடைகளிலிருந்து அவன் பெற்றுக் கொண்டதால் ஆடு, மாடுகளுடனான தொடர்பு ஆதி மனிதனிலிருந்து தொடங்கி விட்டது. உதாரணமாக மனிதர்களின் தந்தை ஆதம் (அலை) அவர்களின் மகன்களைப் பற்றி அல்லாஹ் கூறுகின்றான்.
ஆதமுடைய (ஹாபீல், காபீல் எனும்) இரு மகன்களின் உண்மைச் செய்திகளை நீங்கள் அவர்களுக்கு ஓதிக் காண்பியுங்கள். இருவரும் குர்பானி(பலி) கொடுத்தபோது அவ்விருவரில் ஒருத்தருடைய (குர்பானி) ஏற்றுக்கொள்ளப் பட்டது. மற்றொருவருçடையது ஏற்கப்பட வில்லை. அல்குர்ஆன் : 5:27
இவ்வசனத்திற்கு இப்ன் கதீரின் விளக்கத்தில் குர்பானி கொடுக்கப்பட்டது செம்மறி ஆடு என்று இப்னு அப்பாஸ்(ரழி) அறிவிப்பில் இப்னு அபிஹாத்தமில் பதிவு செய்யப் பட்டதாகக் கூறுகிறார்கள்.
எனவே கால்நடைகளின் பயன்பாடு முதல் மனிதர் ஆதம்(அலை) அவர்களின் காலத்தி லிருந்தே தொடங்கிவிட்டதை அறியலாம்.
இன்னும் சொன்னால், மனிதனைப் படைப் பதற்கு முன்பே, மனிதர்களுக்குத் தேவையான எல்லா வாழ்வாதாரங்களையும் அல்லாஹ் ஏற்படுத்திவிட்டான்.
கதகதப்பூட்டும் கம்பளி உரோமம்:
கால்நடைகளான ஆடு, மாடு ஒட்டகத்தின் உரோமத்திற்கு ஆங்கிலத்தில் wool என்று அழைக்கப்படுகிறது. தமிழில் கம்பளி என்று அழைக்கின்றோம். பொதுவாக செம்மறியாட்டின் உரோமமே மிக அதிகளவில் உற்பத்தியாகி ஆடைகள் நெய்வதற்கு பரவலாகப் பயன்படுகிறது. இந்த கம்பளியில் கதகதப்பு இருப்பதாக அல்லாஹ் கூறுகின்றான். மேலும் அநேக பயன்கள் இருப்பதாகவும் அறிவிக்கின்றான்.
ஆடைகள் நெய்வதற்கு பருத்தி,பட்டு, லினன், செயற்கை இழைகள் மற்றும் சணல் போன்றவை பயன்படுகின்றன. இந்த இழைகளில் இல்லாத சிறப்புகள் கால்நடைகளின் கம்பளிக்கு இருப்பதாக அறிவியல் ஆய்வுகள் கூறுகின்றன.
மனித இன வரலாற்றில் எவ்வளவோ அறிவியல் சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. புதிய புதிய நவீன கண்டுபிடிப்புகள் வந்து விட்டன. ஆனால் அல்லாஹ் தன் கரங்களை கொண்டு படைத்த கால்நடைகளின் (அல்குர் ஆன் 36:71) ஒரே ஒரு உரோமத்தைப் போன்ற ஒன்றை கண்டுபிடிக்க முடியவில்லை.
ஏனென்றால் கம்பளி உரோமத்தின் உள்ள மைப்பு (Complex Structure) மிகமிக சிக்கலான ஒன்று.
நபி(ஸல்) அவர்கள் கூறிய ஹதீஸ் இங்கு கவனிக்கத்தக்கது.
“”குர்பானி பிராணியின் உரோமத்திற்கு நன்மை கொடுக்கப்படும்என்று நபி(ஸல்) அவர்கள் கூறினர். அப்பொழுது ஒவ்வொரு உரோமத்திற்கும் நன்மை கொடுக்கப்படுமா?” என்று கேட்டபொழுது, “”ஆம் ஒவ்வொரு உரோமத்திற்கும்என்று பதில் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஜைது பின் அர்கம்(ரழி),
ஆதாரம் : இப்னு மாஜா.
கம்பளி உரோம இழைகள் (Wool Fiber) Corticle செல்களால் ஆனவை. இந்த செல்கள் Cuticle என்ற உறையில் போர்த்தப்பட்டுள்ளது. செதில் போன்ற குயுட்டிகல் ஆனது Ebicuticle என்ற மற்றொரு மெல்லிய உறையால் மூடப்பட்டுள் ளது. எபிகுயுட்டிகளானது ஈரத்தை ஒட்ட விடாத தன்மை கொண்டது. ஆனால் அதே சமயம் குயுட்டிகிள் வெளியில் உள்ள ஈரப் பதத்தை உறிஞ்சும் தன்மை கொண்டது.
இப்படி உறிஞ்சப்பட்ட ஈரத்தை (Moisture)  நீரை கம்பளி உரோமத்தின் மத்தியில் அனுப் பும் பொழுது கம்பளி மூலக்கூறானது (Wool Molecules)  நீரில் உள்ள ஹைட்ரஜனை இரசாயன மாற்றத்தின் மூலம் (Chemical Reaction) பிரித்து விடுகிறது. இந்நிகழ்வின்போது (Exothermic-(“Outside Heating”) முறைப்படி வெப்பம்.  (140KJ) கதகதப்பு உற்பத்தியாகிறது. குளிர் காலத்திலும் குளிர் பிரதேச மக்களும் கம்பளி ஆடைகள் அணிவதற்கு மூல காரணம் கம்பளி அளிக்கும் கதகதப்புதான். கால்நடைகளின் உரோமம் செய்யும் இரசாயன மாற்றத்தை அல்லாஹ் 1400 ஆண்டுகளுக்கு முன்பே சொல்லி விட்டான்.
கம்பளி ஆடைக்குள்ள மற்றொரு சிறப்பு, கடும் வெப்பமுள்ள சஹாரா பாலைவனத்தில் வசிக்கும் நாடோடிகள் மெல்லிய கம்பளி ஆடைகளை அணிந்திருப்பர். காரணம் கடும் வெப்பத்தில் உடல் வரண்டு விடக்கூடாது என்பதற்காக கம்பளி வெளிவெப்பத்தை உள்ளே விடாது, உள் வெப்பத்தை வெளியே விடாது; ஒரே நிலையில் வைத்திருக்கும் தெர்மக்கோல் (Styroform) தக்கை போன்று செயல்படுகிறது.
கம்பளி உரோமத்தில் மெல்லிய காற்றுப் பைகள் உள்ளன. உடம்பிலுள்ள வியர்வை ஈரத்தை தன் காற்றுப் பைகளில் இழுத்துக் கொள்ளும். இந்தக் காற்றுப் பைகள் தனித்தனி அறைகளாக இருப்பதால் ஈரத்தை உடனடியாக கடத்தாமல் மெதுவாக ஆவியாக்கும். ஆகவே உடல் வெப்பமடைவதை தடுத்து ஒரே நிலையில் வைத்துக் கொள்ளும்  (Natural Insulator)  தன்மையுடையது.
கம்பளி ஆடை மழையில் நனைந்தாலோ அல்லது ஈரமாகிவிட்டாலோ உடம்பிற்குள் ஈரத்தை கடத்துவதில்லை. அதன் எடையில் 30% நீரில் நனைந்தாலும் கதகதப்பை தொடர்ந் தளிக்கும் தன்மை கொண்டது. (Hygroscopic Insulator)
கம்பளி உரோமத்தின் மற்ற சிறப்புகள்:
ஒரு உரோமம் 18-41 மைக்ரான் தடிமன் உள்ளது. மூலக்கூறு கம்பிச்சுருள் போன்று அமைந்துள்ளதால் 50% நீளும் தன்மை உடையது. உரோமம் நன்கு வளையும் (Elasticity)  சுமார் 20,000 முறை முன்னும் பின்னும் வளைத்தாலும் முறியாது. ஆனால் பருத்தி நூல் இழைகள் 3000 தடவை மட்டுமே தாக்குப் பிடிக்கும். பட்டு நூல் 2000 தடவைக்கு மேல் முறிந்துவிடும்.
கம்பளி தீப்பிடித்து எரியாது. தீயில் கரிகிக் கொண்டே செல்லும். கம்பளியை தீயிலிருந்து எடுத்துவிட்டால் உடனே அணைந்து விடும். காரணம் உரோமங்களிலுள்ள மெல்லிய துளைகளில் ஈரப்பதத்தை வைத்திருப்பதால் தீ அணைந்துவிடும். கம்பளி முற்றிலும் தீயில் எறி வதற்கு 38% ஆக்ஸிஜன் தேவை. ஆனால் காற்றில் இருப்பதோ 22% மட்டுமே. இந்த சிறப் புத்தன்மை காரணமாக, விமானம், கப்பல், ரயில் மற்றும் பாதுகாப்புத் துறை, தீயணைப்புத் துறைகளில் கம்பளி இருக்கைகள், விரிப்புகள், போர்வைகள், ஆடைகள் பெரிதும் பயன்படுத் தப்படுகின்றன.
கம்பளி அம்ப்போடேரிக் (Amphoteric)  குண முடையது. அதாவது காரத்தன்மை அமிலத் தன்மை உள்ள இரண்டு இரசாயன சாயங்களை யும் தனது உரோமக்கால்களில் உறிஞ்சிக் கொண்டு நிரந்தர வர்ணத்தை கொடுக்கும். ஆகவே வண்ண ஆடைகள் நெய்வதற்கு உகந்தது.
உடம்பில் இருந்து வெளிவரும் வியர்வை யானது ஆடையில் படிந்து பாக்டீரியாக்களை உற்பத்தி செய்து நாற்றத்தை வெளிவிடும். ஆனால் கம்பளியானது வியர்வை ஈரத்தை தன் னுள் இழுத்துக்கொண்டு சிறிது சிறிதாக காற்றில் ஆவியாக்கி விடுவதால் (Breathability) துர்நாற்றம் அடிப்பதில்லை. மைக்ரோ பாக்டீரியாக்கள் மற்ற செயற்கை இழை ஆடைகளை தாக்கும். ஆனால் கம்பளிகளில் அவை தொற்றுவதில்லை.
ஏனெனில் ஒவ்வொரு உரோமமும் மீன் செதில்கள் போல் அமைந்துள்ளதால் தொற்றாது.
சுற்றுச்சூழலுக்கு உகந்தது. மண்ணில் எளிதில் மக்கி உரமாகும். மற்ற ஆடைகளை விட கம்பளியானது சூரியனின் புற ஊதா (UV rays) கதிர்களை உடலுக்குள் விடாமல் தடுக்ககூடியது.
மின்அதிர்ச்சியைத் தடுக்கக்கூடிய தன்மை கம்பளிக்கு உண்டு. அல்லாஹ் கூறுவதுபோல் “”ஒரு காலம் வரையில் உங்களுக்கு பயன்படு கின்றனகம்பளி நீடித்து உழைக்கக்கூடியது.
கம்பளிக்கு அரபியில் சூப்F (Soof) என்று பெயர். எல்லா காலத்திற்கும் ஏற்ற கம்பளியை போர்த்திக் கொண்டு காடு, மலை எங்கும் அலைந்து திரிந்து மெய்ஞானத்çதை(?) தேடிய வர்கள் தான் “”சூபியாக்கள்என்று அழைக்கப் பட்டனர்.
(கம்பளியில்) “”இன்னும் அநேக பயன்களுண்டு
அல்குர்ஆன் 16:5
என்று அல்லாஹ் கூறுகின்றான். இந்த வசனம் இறங்கிய பொழுது தெரியாத பயன்கள் இன்று நமக்குத் தெரிகின்றது.
பொதுவாக கால்நடைகளிலிருந்து, இறைச்சி, பால், தோல், கம்பளி கிடைக்கிறது. ஆனால் இன்று இதிலிருந்து ஏராளமான உபபொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.
தோல் மற்றும் உரோமத்திலிருந்து கிடைக் கும் பொருட்கள்.
லனோலின் உல்லன் ஆடைகள் தோல் வாத்தியம், நூல், பிரஷ், விளையாட்டு சாதனங்கள், கையுறை, ஷீ, கார்பெட், அஸ்பால்ட், பைண்டர், தைலம், டென்னிஸ் பந்து, தோல் செருப்பு, காரின் உள் அலங்காரம், ஒட்டும் பசை, பெயின்ட், பிளாஸ்டர் பைண்டர்.
கால்நடைகளின் கொழுப்பிலிருந்து கிடைக்கும் பொருள்கள்:
ஜெலட்டின் வெடிமருந்து, பெயின்ட், சால்வென்ட், பபில்காம், மேக்கப் சாதனம், பாலாடைக்கட்டி, தொழில் கூட எண்ணெய், ஸ்டீரிக் அமிலம், செராமிக், மருந்துப் பொருள் கள், ஷீ பாலிஷ். சோப், டயர், பராபின் மெழுகு, கோழித்தீவனம், சலவைத்தூள், கிரையான் சாக்பீஸ், தரைவிரிப்பு பசை, பதப் படுத்தும் பொருள்கள், ரப்பர் தயாரிப்புகள், இரசாயனங்கள், பூச்சிகொல்லி மருந்துகள், மெழுகு திரி, களைக்கொல்லி, ஷேவிங் கிரீம், ஹேர் கண்டிசன் ஷாம்பு, கிரீம், லோ­ன்கள்.
கால்நடைகளின் கொம்பு, எலும்பு, குளம்பு, தரும் பொருட்கள்:
மருத்துவ ஊசி, ஜெலட்டின் டெசர்ட், பியானோ கீ, பாண்டேஜ் ஸ்ட்ரிப், எலும்புக் கரி, பென்சில், ஜெலட்டின் காப்ஸ்யூல், ஒட்டும் டேப்கள், போனோகிராப், பற்பசை, சீப்பு, சட்டை, பட்டன், எமரி பேப்பர், ஐஸ்கிரீம், லேமினேசன், பிளாஸ்டிக் சர்ஜரி பொருட்கள், வால் பேப்பர், நாய் பிஸ்கட், ஸ்டீல் பால் பேரிங், உரம், ஒட்டும் பசைகள், உயர் ரக உரங்கள், பொட்டாஷ், பாஸ்பரஸ் உரங்கள் என்று பட்டியல் போட்டுக் கொண்டே செல்லலாம்.

“”நிச்சயமாக ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய வைகளில் உங்களுக்கு ஒரு படிப்பினை இருக் கிறது. அவற்றின் மடியில் இருந்து (பாலை) நாம் உங்களுக்கு புகட்டுகிறோம். அன்றி உங் களுக்கு அவைகளில் அநேக பயன்களும் இருக் கின்றன. அவைகளில் சிலவற்றை நீங்கள் புசிக் கிறீர்கள். (அல்குர்ஆன் 23:21)
இறுதியாக, மனிதர்களைப் பற்றி அல்லாஹ் கூறுகிறான்:
நீங்கள் கேட்டவைகளை எல்லாம் அவன் உங்களுக்கு அளித்தான். ஆகவே அல்லாஹ் வுடைய அருட்கொடைகளை நீங்கள் கணக் கிடும் சமயத்தில் அவற்றை உங்களால் எண்ண முடியாது. (இவ்வாறு எல்லாமிருந்தும்) நிச்சயமாக மனிதன் வரம்பு மீறுகிறவனாகவும் மிக நன்றி கெட்டவனாகவும் இருக்கிறான்.

அல்குர்ஆன் 14:34


Post a Comment

Contact us