இட்டுகட்டப்பட்ட ஹதீஸ்கள் (தொடர்-2)

0 comments

100 இட்டுகட்டப்பட்ட ஹதீஸ்கள் (தொடர்-2)


11- ((الخير فيَّ وفي أمتي إلى يوم القيامة)). قال ابن حجر : لا أعرفه . “المقاصد الحسنة” للسخاوي (ص 208). وهو في “تذكرة الموضوعات” للفتني (68) . وفي “الأسرار المرفوعة في الأخبار الموضوعة” للقاري (ص 195).

11 (இறுதி நாள் வரை நன்மை என்னிலும் எனது உம்மத்தவரிலும் இருந்து கொண்டிருக்கும்) என்று ஒரு ஹதீஸ் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை என்று ஸகாவி அவர்களுக்குரிய ”அல்மகாஸிதுல் ஹஸனா” என்ற நூலின் (208 ம் பக்க)த்திலும், ஃபதனி அவருக்குரிய ”தத்கிரத்துல் மவ்ழுஆத்” என்ற நூலின் (68 ம் பக்க)த்திலும், அல்காரி அவர்களுக்குரிய ”அல்அஸ் ராருல் மர்ஃபூஆ ஃபில் அக்பாரில் மவ்ழுஆத்” என்ற நூலின் (195 ம் பக்க)த்திலும் இப்னு ஹஜர் கூறியுள்ளார்கள் மவ்ழுஆத்-இட்டுக்கட்டப்பட்டவை.

12- ((من نام بعد العصر ، فاختُلس عقله، فلا يلومنَّ إلا نفسه)). أورده ابن الجوزي في “الموضوعات” (3/69) . والسيوطي في “اللآلئ المصنوعة” (2/279) . والذهبي في “ترتيب الموضوعات” (839) .

12 (யார் அஸருக்குப் பிறகு தூங்குகிறாரோ அவருடைய அறிவு பறிபோய்வி டும் அப்படிப் போய்விட்டால் அவர் தன்னைத்தானே நிந்தித்துக் கொள் ளட்டும்) என்ற இந்த ஹதீஸை இப்னு ஜவ்ஸி அவர்கள் ”மவ்ழுஆத்”–இட் டுக்கட்டுப்பட்டவை என்ற நூலின் (69/3)ல் கூறியுள்ளார், சுயூத்தி அவர்கள் ”அல்லஆலில் மஸ்நூஆ” என்ற நூலின் (279/2)ல் (இட்டுக்கட் டுப்பட்டது என்றும்), தஹபி”தர்த்தீபுல் மவ்லூஆத்” என்ற நூலின் (839) பக்கத்தி லும் கூறியுள்ளார்கள்.

13- ((من أحدث ولم يتوضأ فقد جفاني ……)). قال الصغاني : موضوع . “الموضوعات” (53) . والألباني : موضوع.”الضعيفة” (44) .

13 (யார் ஒழுச் செய்து அது முறிந்த பிறகு ஒழுச் செய்யவில்லையோ அவர் எனக்கு அநீதி இழைத்தவராவார்) என்ற இந்த ஹதீஸை ஸன்ஆனி அவர் கள் இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ் என்று ”மவ்ழுஆத்” என்ற நூலின் (53)ம் பக்கத்தில் கூறியுள்ளார், அல்பானி அவர்கள் ”அழ்ழயீஃபா” என்ற நூலின் (44)ம் பக்கத்திலும் கூறியுள்ளார்கள்.

14- ((من حج البيت ولم يزرني . فقد جفاني)). موضوع. قاله الذهبي في “ترتيب الموضوعات” (600) . والصغاني في “الموضوعات” (52) . والشوكاني في “الفوائد المجموعة” (326) .

14 (ஹஜ் செய்த ஒருவர் எனது கப்;ரை ஸியாரத் செய்யவில்லையானால் அவர் எனக்கு அநீதி இழைத்தவராவார்) என்ற இந்த ஹதீஸை தஹபி அவர்கள் இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ் என்று ”தர்த்தீபுல் மவ்ழூஆத்” என்ற நூலின் (600)ம் பக்கத்திலும், ஸன்ஆனி அவர்கள் ”மவ்ழூஆத்” என்ற நூலின் (52)ம் பக்கத்திலும் ஷவ்க்கானி அவர்கள் ”அல்டஜ்மூஆ” என்ற நூலின் (326)ம் பக்கத்திலும் கூறியுள்ளார்கள்.

15- ((من حج، فزار قبري بعد موتي، كان كمن زارني في حياتي)). قال ابن تيمية: ضعيف . “قاعدة جليلة” (57) . قال الألباني: موضوع. “الضعيفة” (47) . وانظر “ذخيرة الحفاظ” لابن القيسراني (4/5250).

15 (ஹஜ் செய்த ஒருவர் எனது மரணத்திற்குப் பிறகு எனது கப்;ரை ஸியாரத் செய்தால் அவர் என்னை உயிருடனுள்ளபோது சந்தித்தவரைப் போன்றவரார்) என்ற இந்த ஹதீஸை இப்னுத் தைய்மிய்யா அவர்கள் ”காயிததுன் ஜலீலா” என்ற நூலின் (57)ம் பக்கத்தில் பலவீனமானது என்றும், அல்பானி அவர்கள் இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ் என்று ”அழ்ழயீஃபா” என்ற நூலின் (47)ம் பக்கத்திலும், ஃபைஸரானி அவர்களின் ”தத்கிரத்துல் ஹுஃப்பாழ்” (4/5250)என்ற நூலிலும் இது இட்டுக்கட்டப் பட்ட ஹதீஸ் என்று உள்ளது.

16- ((اختلاف أمتي رحمة)). موضوع. “الأسرار المرفوعة” (506) . “تنزيه الشريعة” (2/402) . وقال الألباني: لا أصل له. “الضعيفة” (11) .

16 (எனது உம்மத்தவர் கருத்துவேறுபாடு கொண்வது அருளாகும்) என்ற இந்த ஹதீஸ் ”அல்அஸ்ராருல் மர்ஃபூஆ” என்ற நூலின் (506)ம் பக்கத்தி லும், ”தன்ஸீஹுஷ் ஷரீஆ” என்ற நூலின் (2/402) பக்கத்திலும் இட்டுக் கட்டப்பட்ட ஹதீஸ் என்று உள்ளது. அல்பானி அவர்கள் ”அழ்ழயீஃபா” என்ற நூலின் (11)ம் பக்கத்தில் இது ஆதார அடிப்படையற்றது எனக் கூறியுள்ளார்கள்.

17- ((أصحابي كالنجوم بأيهم اقتديتم اهتديتم)). وفي لفظ: ((إنما أصحابي مثل النجوم فأيهم أخذتم بقوله اهتديتم)).قال ابن حزم : خبر مكذوب موضوع باطل لم يصح قط.”الإحكام في أصول الأحكام”(5/64) و (6/82) . وقال الألباني: موضوع. “الضعيفة” (66) . وانظر “جامع بيان العلم وفضله” لابن عبد البر (2/91).

17(எனது ஸஹாபாக்கள் நட்சத்திரங்களைப் போன்றவர்கள் அவர்களில் யாரை நீங்கள் பின்பற்றினாலும் நேர்வழி அடைவீர்கள் மற்றொரு அறிவிப்பில் நிச்சயமாக எனது ஸஹாபாக்கள் நட்சத்திரங்களைப் போன்றவர்கள் அவர்களின் யார் சொல்லை நீங்கள் எடுத்து நடந்தாலும் நேர்வழி அடைவீர்கள்) என்ற இந்த ஹதீஸ் இட்டுக்கட்டப்பட்ட பொய்ச் செய்தி, ஆதாரமாகக் கொள்ள அறவே தகுதி அற்றது என இக்னு ஹஸ்ம் அவர்கள் ”அல்அஹ்காமு ஃபீஉசூலில் அஹ்காமி” என்ற நூலின் ‘(5/64) ، (6/82)ம் பக்கங்களிலும், அல்பானி அவர்கள் ”அழ்ழயீஃபா” என்ற நூலின் (66)ம் பக்கத்தில் இது இட்டுக்கட்டப்பட்டது என்றும் கூறியுள்ளார்கள், இப்னு அப்துல் பர் அவர்களுக்குரிய ”ஜாமிவு பயானில் இல்மி வ ஃபழ்லிஹி ” என்ற நூலின்’(12/91) ம் பக்கத்தில் ஆதாரமற்ற பொய் ஹதீஸ் என்று உள்ளது.

18- ((من عَرَفَ نفسهُ فقد عرف ربَّه)).موضوع.”الأسرار المرفوعة” (506) . و “تنزيه الشريعة”(2/402) . “تذكرة الموضوعات” (11) .

18 (யார் தன்னை அறிந்துவிட்டானோ அவன் தனது இறைவனை அறிந் தவனாவான்) என்ற இந்த ஹதீஸ் ”அல்அஸ்ராருல் மர்ஃபூஆ” என்ற நூலின் (506)ம் பக்கத்திலும், ”தன்ஸீஹுஷ் ஷரீஆ” என்ற நூலின் (2/402) பக்கத்திலும் ”தத்கிரதுல் மவ்ழூஆத்” என்ற நூலின் (11)ம் பக்கத் திலும் இட்டுக்கட்டப்பட்டத என்று உள்ளது.

19- ((أدَّبني ربي. فأحسن تأديبي)). قال ابن تيمية: لا يعرف له إسناد ثابت .”أحاديث القصاص” (78) .وأورده الشوكاني في “الفوائد المجموعة” (1020) . والفتني في “تذكرة الموضوعات” (87) .

19 (எனது இறைவன் எனக்கு ஒழுங்கு கற்பித்து அந்த ஒழுங்கு கற்பித் தலை அழகாகவும் ஆக்கியுள்ளான்) என்ற இந்த ஹதசுக்கு ”அஹாதீசுல் கஸாஸ்” என்ற நூலில் (78)ம் பக்கத்தில் சரியான அறிவிப்பாளர் வரிசை இருப்பதாக எனக்குத் தெரியவில்லை என்று இப்னு தைமிய்யா அவர்க ளும், ”அல்ஃபவாயிதுல் மஜ்மூஆ” என்ற நூலின் (1020) பக்கத்தில் ஸவ்க் கானி அவர்களும் ”தத்கிரது மவ்ழூஆத்” என்ற நூலின் (87)ம் பக்கத்தில் அல்ஃபத்னா அவர்களும் அறிவிப்பாளர் வரிசை சரியற்றது எனக் கூறியுள்ளார்கள்.

20- ((الناس كلهم موتى إلا العالمون، والعالمون كلهم هلكى إلا العاملون والعاملون كلهم غرقى إلا المخلصون والمخلصون على خطر عظيم)). . قال الصغاني : هذا الحديث مفترى ملحون والصواب في الإعراب: العالمين والعالمين .”الموضوعات” (200) . وأورده الشوكاني في “الفوائد المجموعة” (771) . والفتني في “تذكرة الموضوعات” (200) .

20 (ஆலிம்-அறிஞர்-களைத் தவிர மற்றய எல்லா மனிதர்களும் பிணத்தைப் போன்றவர்கள், (கல்விக்கேற்ப)செயல்படுபவர்களைத் தவிர மற்றய எல்லா ஆலிம்களும் நாசத்திற்குரியவர்கள், தூய்மையுடன் செயல் படக்கூடியவர்களைத் தவிர(தூய்மையின்றி) செயல்படக்கூடியவர்கள் அழிந்துவிடக்கூடியவர்கள், தூய்மையுடன் செயல்படக்கூடியவர்களும் மிகப் பெரும் விபத்தின் மீதே இருக்கிறாhகள்) என்ற இந்த ஹதீஸ் இட்டுக்கட்டப்பட்டது என்று ஸன்ஆனி அவர்கள் ‘அல்மவ்ழூஆத்’ என்ற நூலில் (200)ம் பக்கத்திலும், ஷவ்கானி அவர்கள் ‘அல்ஃபவாயிதுல் மஜ்மூஆ’ என்ற தமது நூலில் (771) ம் பக்கத்திலும், அல்ஃபத்னா அவர்கள் ‘தத்கிரதுதுல் மவ் மூஆத்’ என்ற தமது நூலில் (200)ம் பக்கத்திலும் கூறியுள்ளனர்.
இன்ஷா அல்லாஹ் தொடரும்….


Post a Comment

Contact us