இட்டுகட்டப்பட்ட ஹதீஸ்கள் (தொடர்-10)

0 comments

100 இட்டுகட்டப்பட்ட ஹதீஸ்கள் (தொடர்-10)


91- ((إن للقلوب صدأ كصدأ الحديد وجلاؤها الاستغفار)). موضوع.”ذخيرة الحفاظ” (2/1978) . “الضعيفة” (2242) .

91 (இரும்பு துருப்பிடிப்பது போல உள்ளங்களிலும் துருப்பிடிக்கும் பாவ மன்னிப்புத் தேடுவது உள்ளத்தின் துருவை அகற்றிவிடும்) என்ற இந்த ஹதீஸ் ”ஃதகீரதுல் ஹுஃப்பாழ்’ என்ற நூலில் (2/1978) ம் பக்கத்திலும், ”அழ்ழயீஃபா’ என்ற நூலில் (2242) ம் பக்கத்திலும் இட்டுக்கட்டப்பட்டது என்று உள்ளது.

92 ((رجعنا من الجهاد الأصغر إلى الأكبر)). لا أصل له. “الأسرار المرفوعة” (211) . “تذكرة الموضوعات” للفتني (191) .

92 (சிறிய போரை முடித்து விட்டு பெரிய போருக்குச் சென்று கொண்டிருக் கிறோம்) என்ற இந்த ஹதீஸ் ‘அல்ஸ்ராருல் மர்ஃபூஆ’ என்ற நூலில் (211) ம் பக்கத்திலும், ஃபத்னா அவர்களுக்குரிய ‘தத்திகிரத்துல் மவ்ழூ ஆத்’ என்ற நூலில் (191) ம் ஆதார அடிப்படை அற்றது என்று உள்ளது

93- ((من أفطر يوماً من رمضان في غير رخصة رخصها الله له، لم يقض عنه صيام الدهر كله، وإن صامه)). ضعيف. “تنزيه الشريعة” (2/148) . “الترغيب والترهيب” (2/74).

93 (அல்லாஹ் அனுமதித்த காரணமின்றி ஒருவர் நோன்பை விட்டுவிட்டு அதற்காக காலமெல்லாம் அவர் நோன்பு நோற்றாலும் அந்த நோன்பை நிறைவேற்றியவராகமாட்டார்)என்ற இந்த ஹதீஸ் அவர்களுக்குரிய தன்ஷீ ஹுஷ் ஷரீஆ’ என்ற நூலில் (2/148) ம் பக்கத்திலும், தர்கீப், தர்ஹீப்’ என்ற நூலில் (2/74) ம் பக்கத்திலும், பலவீனமானது என்று உள்ளது.

94- ((إن عبد الرحمن بن عوف يدخل الجنة حبواً)) . موضوع. “المنار المنيف” لابن القيم (306) . “الفوائد المجموعة” للشوكاني (1184).

94 (அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் சுவர்க்கத்திற்கு தவிழ்ந்து செல்வார்)என்ற இந்த ஹதீஸ் இப்னுல் கய்யிம் அவர்களுக்குரிய ”அல்மனா ருல் முனீஃப்’ என்ற நூலில் (306) ம் பக்கத்திலும், ஷவ்கானி அவர்களுக்கு ரிய அல் ஃபவாயிதுல் மஜ்மூஆ’ என்ற நூலில் (1184) ம் பக்கத்திலும், பலவீன மானது என்று உள்ளது.

95- ((أبغض الحلال إلى الله الطلاق)). ضعيف. “العلل المتناهية” لابن الجوزي (2/1056) . “الذخيرة” (1/23).

95 (ஹலாலான விசயங்களில் அல்லாஹ்விற்கு மிக வெறுப்பானது தலாக் ஆகும்) என்ற இந்த ஹதீஸ் இப்னு ஜவ்ஸி அவர்களுக்குரிய அல்இலலுல் முதனாஹியா’ என்ற நூலில் (2/1056) ம் பக்கத்திலும், ‘அஃத்தகீரா’ என்ற நூலில் (1/23) ம் பக்கத்திலும் பலவீனமானது என்று உள்ளது.

96- ((لما قدم النبي صلى الله عليه وسلم المدينة جعل النساء والصبيان والولائد يقولون

طلع البدر علينا وجب الشكر علينا

أيها المبعوث فينا من ثنيات الوداع

ما دعا لله داع جئت بالأمر المطاع

ضعيف. “أحاديث القصاص” لابن تيمية (17) . “تذكرة الموضوعات” (196).

96 (எங்களின் மீது முழுநிலா உதித்துவிட்டது, நன்றி செய்வது எங்கள் மீது கடமை ஆகிவிட்டது, மக்காவிற்கு விடை கொடுத்துவிட்டு எங்களிடம் அனுப்பப்பட்டவரே! அல்லாஹ்வின் பால் அழைக்கக்கூடியவர் அழைக்கும் போது கட்டப்பட்ட நடக்கும் ஆணையைக் கொண்டு வந்துவிட்டீர்) என்ற இந்த ஹதீஸ் இப்னு தய்மிய்யா அவர்களுக்குரிய ‘அஹாதீசுல் கஸாஸ்’ என்ற நூலில் (17) ம் பக்கத்திலும், ‘தத்திகிரத்துல் மவ்ழூஆத்’ என்ற நூலில் (196) ம் பக்கத்திலும், பலவீனமானது என்று உள்ளது

97- ((إياكم والحسد فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب)). ضعيف. “التاريخ الكبير” (1/272) . “مختصر سنن أبي داود” للمنذري(7/226).

97 (பொறாமைப்படுவதை விட்டும் உங்களை எச்சரிக்கிறேன், ஏனெனில் நெருப்பு விறகைத் தின்றுவிடுவதுபோல பொறாமை நன்மைகளைத் தின்று விடும்) என்ற இந்த ஹதீஸ் ‘அத்தாரீகுல் கபீர்’ என்ற நூலில் (1/272) ம் பக்கத்திலும் முன்திரி அவர்களுக்குரிய ”முகதஸர் சுனன் அபீதாவூத்’ என்ற நூலில் (7/226)ம் பக்கத்திலும், பலவீனமானது என்று உள்ளது.

98- ((إن الله عز وجل يقول: أنا الله لا إله إلا أنا مالك الملوك وملك الملوك قلوب الملوك في يدي وإن العباد إذا أطاعوني حولت قلوبهم عليهم بالسخط والنقمة فساموهم سوء العذاب، فلا تشغلوا أنفسكم بالدعاء على الملوك…..الخ)). ضعيف جداً. “الأحاديث القدسية” للعيسوي (43) . “الضعيفة” (602).

98 (நானே அரசர்களுக்கெல்லாம் அரசன், அரசர்களின் உள்ளங்கள் எனது கையில் இருக்கிறது, மக்கள் எனக்கு கட்டுப்பட்டு நடந்தால் அவர் களுடைய உள்ளங்களை கோபம், தண்டனையைக் கொண்டு திருப்பி விடு வேன், அப்படி திரப்பிவிட்டால் அவர்களை மோசமாகக் கொடுமைப் படுத் துவார்கள் எனவே நீங்கள் அவர்களுக்கு பாதகமாக துஆச் செய்வதில் ஈடுபட வேண்டாம் என நிச்சயமாக அல்லாஹ் கூறுகிறான்) என்ற இந்த ஹதீஸ் ஈஸவி அவர்களுக் குரிய அல்அஹாதீஸுல் குதுஸிய்யா’ என்ற நூலில் (43) ம் பக்கத்திலும் அழ் ழயீஃபா’ என்ற நூலில் (602) ம் பக்கத்திலும், முற்றிலும் பலவீனமானது என்று உள்ளது

99- الأذان والإقامة في أذن المولود. ضعيف جداً. “بيان الوهم” لابن القطان (4/594) . “المجروحين” لابن حبان (2/ 128) .”الضعيفة” (1/494).

99 (பிறந்த குழந்தையின் காதில் பாங்கும் இகாமத்தும் சொல்ல வேண் டும்) என்ற இந்த ஹதீஸ் இப்னுல் கத்தான் அவர்களுக்குரிய பயானுல் வஹ்ம்’ என்ற நூலில் (4/594) ம் பக்கத்திலும் இப்னு ஹிப்பான் அவர்க ளுக்குரிய ‘அல் மஜ்ரூஹீன்’ என்ற நூலில் (2/128) ம் பக்கத்திலும் ”அழ்ழயீஃபா’ என்ற நூலில் (1/494) ம் பக்கத்திலும், முற்றிலும் பலவீ னமானது என்று உள்ளது

100- ((الحكمة ضالة كل حكيم ، فإذا وجدها فهو أحق بها)). ضعيف. “المتناهية” لابن (الجوزي (1/96) . “سنن الترمذي” (5/51

100 (ஞானம் ஒவ்வொரு அறிவாளியின் காணமல் போன பொருளாகும், அது கிடைக்கும்போது அதற்கு அவன் மிகத் தகுதியானவனாவான்) என்ற இந்த ஹதீஸ் இப்னு ஜவ்ஸி அவர்களுக்குரிய அல்முதனாஹியா’ என்ற நூலில் (1/96) ம் பக்கத்திலும் சுனனுத் தர்மதியி’என்ற நூலில் (189) பக்கத்திலும், ‘அல்ஃபவாயிதுல் மஜ்மூஆ’ என்ற நூலில் ((5/51 ம் பக்கத்திலும் பலவீன மானது என்று உள்ளது.
இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்கள் என்ற தொடர் இத்துடன் நிறைவடைகின்றது


Post a Comment

Contact us