100 இட்டுகட்டப்பட்ட ஹதீஸ்கள் (தொடர்-9)
81- ((سيد القوم خادمهم)) . ضعيف. “المقاصد الحسنة” للسخاوي (579) . “الضعيفة”
81 (ஒரு சமுதாயத்தின் தலைவன் அவர்களின் சேவகன்) என்ற இந்த ஹதீஸ் அஸ்ஸகாவி அவர்களுக்குரிய ‘அல்துமகாஸீதுல் ஹஸனா’ என்ற நூலில் (579) ம் பக்கத்திலும் ‘அழ்ழயீஃபா’ என்ற நூலில் (1502) ம் பக்கத்தி லும் பலவீனமானது என்று உள்ளது.
82- ((عليكم بالشفائين: العسل والقرآن)) . ضعيف. ‘أحاديث معلَّة ظاهرها الصحة’ للوادعي (247) . ‘الضعيفة’ (1514) .
82 (தேன், குர்ஆன் ஆகிய இரண்டு நிவாரணிகளைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்) என்ற இந்த ஹதீஸ் அல்வதாயி அவர்களுக்குரிய அஹாதீ துன் முஅல்லதுன் ழாஹிருஹா அஸ்ஸிஹ்ஹது’ என்ற நூலில் (247) ம் பக்கத்திலும் ‘அழ்ழயீஃபா’ என்ற நூலில் (1514) ம் பக்கத்திலும் பலவீனமானது என்று உள்ளது.
83- ((آمن شعر أمية بن أبي الصلت وكفر قلبه)) . ضعيف. ‘كشف الخفاء’ (1/19) . ‘الضعيفة’ (1546) .
83 (உமய்யா பின் அபீஸல்த்தின் கவிதை ஈமான் கொண்டுள்ளது, அவன் உள்ளம் காஃபிராக உள்ளது) என்ற என்ற இந்த ஹதீஸ் தராபல்ஸி அவர்களுக்குரிய ‘கஷ்ஃபுல் ஃகஃபாஃ’ என்ற நூலில் (1/19)பக்கத்திலும்’அழ்ழ யீஃபா’ என்ற நூலில் (1546) பக்கத்திலும் பலவீனமானது என்று உள்ளது.
84- ((البر لا يبلى والإثم لا ينسى والديان لا ينام فكن كما شئت كما تدين تدان)). ضعيف. ‘الكشف الإلهي’ للطرابلسي (681) . ‘اللؤلؤ المرصوع’ للمشيشي (414) .
84 (நல்லது அழிந்துபோகாது, பாவம் மறக்கப்படாது, கடன்காரன் தூங்க முடியாது எனவே நீ விரும்பியவாறு இருந்து கொள், நீ கொடுப்பது போல கொடுக்கப்படுவாய்) என்ற இந்த ஹதீஸ் தராபல்ஸி அவர்களுக்குரிய கஷ்ஃபுல் இலாஹி’என்ற நூலில் (681) பக்கத்திலும் அல் மஷீஷி அல்லு லுஃலுல் மர்சூஃ’ என்ற நூலில் (414) பக்கத்திலும் பலவீனமானது என்று உள்ளது.
85- ((لمعالجة ملك الموت أشد من ألف ضربة بالسيف)) . ضعيف جداً. ‘ترتيب الموضوعات’ للذهبي (1071) . ‘الموضوعات’ لابن الجوزي (3/220) .
85 (மலக்குல் மவ்த் உயிரைக் கைப்பற்றும் போது ஏற்படும் வேதனை ஆயிரம் முறை வாளால் வெட்டுவதை விட கடினமாக இருக்கும்) என்ற என்ற இந்த ஹதீஸ் தஹபி அவர்களுக்குரிய தர்தீபுல் மவ்ழூஆத்’ என்ற நூலில் (1071) ம் பக்கத்திலும், இப்னுல் ஜவ்ஸி அவர்களுக்குரிய அல் மவ்ழூஆத்’ என்ற நூலில்(3/220) ம் பக்கத்திலும் முற்றிலும் பலவீனமானது என்று உள்ளது.
86- ((بادروا بالأعمال سبعاً، هل تنتظرون إلا مرضاً مفسداً وهرماً مفنداً أو غنى مطغياً أو فقراً منسياً أو موتاً مجهزاً أو الدجال فشر غائب ينتظر أو الساعة والساعة أدهى وأمر)) . ضعيف. ‘ذخيرة الحفاظ’ لابن طاهر (2/2313) . ‘الضعيفة’ (1666) .
86 (ஏழு காரியங்களை விரைவாகச் செய்யுங்கள் ஏனெனில் அழித்துவிடக் கூடிய நோய், தள்ளாத வயோதிகம், அழிவை ஏற்படுத்தும் செல்வம் அல்லது கடும் ஏழ்மை, அல்லது தஜ்ஜால் அதாவது எதிர் நோக்கும் மறை வான தீமை, அல்லது மிகக் கடுமையான கசப்பான மறுமை நாள் இவைகளைத் தவிர வேறு எதனையும் நீங்கள் எதிர் பார்க்கமுடியாது) என்ற இந்த ஹதீஸ் இப்னு தாஹிர் அவர்களுக்குரிய ”தக{ரதுல் ஹுஃப்பாழ்’ என்ற நூலில் (2/2313) ம் பக்கத்திலும், ”அழ்ழயீஃபா’ என்ற நூலில் (1666) ம் பக்கத்திலும் பலவீனமானது என்று உள்ளது.
87 – ((أجرؤكم عل الفتيا أجرئكم على النار)). ضعيف. ‘الضعيفة’ (1814) .
87 (தீர்ப்பு வழங்குவதின் மீது மிக்க பலமிக்கவராக இரக்கிறாரோ அவர் நரக நெருப்பின் மீதும் பலமுறையாக இருப்பார்) என்ற இந்த ஹதீஸ் ”அழ்ழயீஃபா’ என்ற நூலில் (1814)ம் பக்கத்திலும் பலவீனமானது என்று உள்ளது.
88- ((اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله)) . ضعيف. ‘تنزيه الشريعة’ للكناني (2/305) . ‘الموضوعات’ للصغاني (74) .
88 (முஃமினின் கூறிய பார்வையை பயந்து கொள், ஏனெனில் நிச்சயமாக அவன் அல்லாஹ்வின் ஒளியைக் கொண்டு பார்க்கிறான்) என்ற இந்த ஹதீஸ் கனானி அவாகளுக்குரிய ‘தன்ஸுஹுஷ் ஸரீஆ’ என்ற நூலில் (2/305) ம் பக்கத்திலும், ஸகானி அவர்களுக்குரிய ‘அல் மவ்ழூஆத்’ என்ற நூலில் (74) ம் பக்கத்திலும் பலவீன மானது என்று உள்ளது.
89- ((الدنيا دار من لا دار له ومال من لا مال له ولها يجمع من لا عقل له)). ضعيف جدّاً. ‘الأحاديث التي لا أصل لها في الإحياء’ للسبكي (344) . ‘تذكرة الموضوعات’ للفتني (174) .
89 (இவ்வுலகம் வீடில்லாதவருக்கு வீடு, பொருளில்லாதவருக்கு பொருள், இவ்வுலகிற்காக புத்தியில்லாதவர் சேமித்துக் கெண்டிருப்பார்) என்ற இந்த ஹதீஸ் சுபுகி அவாகளுக்குரிய ‘அல்அஹரீதுல்லதீ லா அஸல லஹா ஃபில் அஹ்யாஇ’ என்ற நூலில் (344) ம் பக்கத்திலும், ஃபத்னா அவர்களுக்குரிய தத்திகிரத்துல் மவ்ழூஆத்’ என்ற நூலில் (174) ம் பக்கத்திலும் முற்றிலும் பலவீனமானது என்று உள்ளது.
90- ((لا تجعلوا آخر طعامكم ماءً)) . لا أصل له . ‘الضعيفة’ (2096) .
90 (உங்களின் உணவின் கடைசியாக தண்ணீரைப் பயன்படுத்தாதீர்கள்) என்ற இந்த ஹதீஸ் ”அழ்ழயீஃபா’ என்ற நூலில் (2096) ம் பக்கத்தில் எவ் வித ஆதா அடிப்படை அற்றது என்று உள்ளது.
இன்ஷா அல்லாஹ் தொடரும்……

Post a Comment